இன்றைய தரிசன நேரத்தில், லிங்க பைரவி, சித்சக்தி, விழிப்புணர்வு, ஆகியவை பற்றி அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்களிலிருந்து சில துளிகள் இங்கே உங்களுக்காக...

6:21

லேசான மேகமூட்டத்துடன், மதியம் பெய்த மழையின் ஈரம் இன்னும் காயாமல் இருக்க, அனைவரையும் அருள்மழையில் நனைத்திட சத்குரு தரிசனமளித்தார். ஆதி சங்கரரின் யோகரத்தோவா பாடலை சத்குருவைத் தொடர்ந்து அனைவரும் பாடினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

6:37

லிங்க பைரவி தேவியைப் பற்றியும், தேவி யந்திரம் இருக்குமிடத்தில் இசை இசைப்பது என்பது பற்றியும் ஒருவர் கேட்க, "தேவியை நாம் தேர்ந்தெடுக்கவில்லை, அவளை நாம் எப்படி வேண்டுமோ அப்படி உருவாக்கியுள்ளோம். தேவியின் அமைப்பில் நுட்பமான கணக்கு, வடிவியல், சப்தங்கள் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது. தேவிக்கு ஏற்ற சப்தம் அவள் இருக்குமிடத்தில் ஒலித்தால், அவளை உணரும் சாத்தியம் பன்மடங்கு அதிகரிக்கும். ஆனால் அந்த சரியான ஒலியை ஒலிப்பது சாதரணமான விஷயமல்ல. உங்கள் இசையை அனுப்பி வையுங்கள், அது பொருந்துமா என்று சொல்கிறோம்." என்று சத்குரு பதிலளித்தார்.

6:52

சித்சக்தி தியானம் பற்றி ஒருவர் கேட்க, "பிரித்துப் பார்க்கும் புத்திக்கு மேற்கத்திய கலாச்சாரம் அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டது. மனம் என்பது பழைய பதிவுகள் அனைத்தும் உள்ளடங்கியது. புத்தி என்பது இந்த ஞாபகங்களை வைத்தே செயல்படுகிறது. அகங்காரம் என்பது நீங்கள் எதனுடன் அடையாளம் கொண்டுள்ளீர்களோ அதைப் பொருத்து புத்தியை செலுத்தும். சித்தம் என்பதுதான் உயிருள்ள மனம், உடலின் ஒவ்வொரு செல்லிலும் செயல்படும் படைத்தவனின் புத்திசாலித்தனத்தை சித்தம் என்கிறோம். சித்தம் என்பது, புத்தி, பழைய பதிவுகள், அகங்காரம், அனைத்தையும் கடந்தது. அதனுடன் தொடர்புகொண்டால், கடவுளே உங்களுக்கு அடிமையாக இருப்பார். சித்தம் மூலம் வாழ்க்கையை அணுகினால் தெய்வீகம் என்பது தொலைதூரத்தில் இருக்காது, இங்கேயே இப்போதே இருக்கும்." என்று சத்குரு பதிலளித்தார்.

7:10

ஒருவர் விழிப்புணர்வாக எப்படி உறங்குவது என்று கேள்வி கேட்க, "உடலுடன், பொருள்தன்மையுடன், ஆழமான அடையாளம் இருக்கும்வரை அது சாத்தியமல்ல." என்று சத்குரு பதிலளித்தார்.

7:22

புதிதாக திருமணமான ஒரு தம்பதியனருக்கு வாழ்த்துச்சொல்லி ஆசிகள் வழங்கிவிட்டு, வணங்கி விடைபெற்றுச்சென்றார்.