vijay tv, athanaikum asaipadu, sadhguru, isha, yoga, meditation, kriya, q&a, isha kriya, shambavi



VIJAY TVல் அத்தனைக்கும் ஆசைப்படு

‘காசி’ என்று சொன்னவுடனேயே சிலருக்கு கங்கை ஞாபகத்திற்கு வரும்; சிலருக்கு காசி விஷ்வநாதர் ஞாபகத்திற்கு வருவார்; ஆனால், காசி என்கிற நகரமே ஒரு யந்திரமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?!

காசியின் வரலாறையும் காசியின் ரகசியங்களையும் சத்குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஸ்டார் விஜய் டிவியில் சத்குருவின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ – காசியின் ரகசியங்களைத் தாங்கியபடி!

வரும் ஞாயிறன்று

​இறந்த உடலை எரிப்பது ஏன்? அதிலும் காசியில் எரிப்பதில் உண்மையிலேயே பலன் உண்டா?! இறந்த பின் நம் உடலில் என்ன நடக்கிறது? அகோரிகள் உண்மையிலேயே பிணத்தை திண்பார்களா? இதுபோன்ற அமானுஷ்யக் கேள்விகளுக்கு சத்குருவின் விளக்கங்களுடன் வரும் வார ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

காசியின் ரகசியங்களைத் தாங்கியபடி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறும் அத்தனைக்கும் ஆசைப்படு நிகழ்ச்சியின் வரும்வார பகுதியின் ஒரு முன்னோட்டம் இங்கே!

இதுவரை…
VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 9

​எல்லாரும் பார்த்தாலே பயப்படும் ரூபத்தில் இருப்பவர் பைரவர். ஆனால் அந்த பயத்தை போக்குவதற்கு நாம் வழிபடுவதும் அவரைத்தான். காலம் நின்றால் அனைத்தும் நின்றுவிடும், சிவன் காலத்தை கடந்த நிலையில இருப்பதால், நாம் அவரைக் கால பைரவர் என அழைக்கிறோம். அத்தனைக்கும் ஆசைப்படு தொடரின் இந்தப் பகுதியில் சத்குரு பேசும் விஷயங்கள், ஆழமான பல உண்மைகளை நமக்கு சொல்வதாய் உள்ளது.

காலபைரவர் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இந்த வீடியோவைப் பாருங்கள்.

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 8

நம் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீருக்கும் கங்கையில் ஓடும் நீருக்கும் அப்படி என்ன வித்தியாசம்? காசியில் சாக வேண்டுமென்று ஏன் அனைவரும் ஆசைப்படுகின்றனர்? பல வருடங்களாக நாம் இந்த வழக்கங்களை கடைப்பிடித்து வருவதால் இதனை மூட நம்பிக்கை என்றே நம்மில் பலரும் எண்ணுகிறோம், ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இது ஒரு கலாச்சாரமாக நம் இரத்தத்தில் ஊறி இருக்கிறதே!

உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள, ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரின் இந்தப் பகுதியைப் பாருங்கள்.

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 7

காசி எங்கே இருக்கிறது என்று ஒருவரைக் கேட்டால் அவர் வடக்கே கைகாட்டலாம்; இல்லையென்றால் வரைபடத்தில் ஒரு புள்ளியை சுட்டிக் காட்டலாம், ஆனால் வீடியோவில் சத்குருவோ காசி பூமியிலேயே இல்லை என்கிறார். அப்படியென்றால் உண்மையில் காசி எங்கிருக்கிறது?!

வீட்டில் குடம் குடமாகத் தண்ணீர் இருக்க, அனைவரும் கோயிலில் தரும் ஒரு சொட்டு தீர்த்தத்திற்காக அலைமோதுவது ஏன்? இப்படிப் பல விடைதெரியாக் கேள்விகளுக்கு சத்குருவின் விடைகளோடு இங்கே விஜய் டிவியின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ நிகழ்ச்சியின் சென்றவார பகுதி!

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 6

“காசிக்குப் போனா திரும்ப முடியாதா? இதில் தற்போதைய காலச் சூழலில் இது பொருந்துமா?”
சத்குருவிடம் கேட்டபோது, கிடைத்த யதார்த்த பதிலும், காசியில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை குறித்தும் அதன் வரலாற்றுப் பின்புலம் குறித்து அவர் கூறும் விளக்கங்களும் இன்னும் சில மறைக்கப்பட்ட காசியின் ரகசியங்களை அவிழ்க்கின்றன.

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 5

காசியில் தங்கிய சிவன் அதன் மேல் காதல்கொண்டு, காசியிலேயே தங்க முடிவு செய்தாராம். இத்தனை அழகான இந்த நகரத்தில் இருப்பவர்கள், வளத்தோடு மட்டுமல்ல, அவர்களுக்கு முக்தியும் கிடைக்க வேண்டும் என்று காசியை சக்தி வாய்ந்த நகரமாக மாற்றி அமைத்தாராம். சிவனுக்கும் காசிக்கும் அப்படி என்ன தொடர்பு, அவருக்கு காசி மேல் என்ன பாசம்?

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 4

மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்களே விரும்பக் கூடிய நகரமாக காசி இருந்ததென்று உங்களுக்கு தெரியுமா? இது கேட்பதற்கு ஏதோ மாயாஜாலக் கதைபோல் தெரிந்தாலும், இப்படி சொல்லப்படுகிற கதைகளுக்கு பின்னால் ஏதாவது உண்மை இருக்கிறதா என்ன?

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 3

யோகா செய்தால் கோவிலுக்கு போக வேண்டாம் என சொல்லும் சத்குரு, காசியின் பெருமைகளை இந்தப் பகுதியில் விவரிக்கிறார். காசி, கோவில், யந்திரம் – இவற்றின் தொடர்பென்ன? வீடியோவை பாருங்கள்.

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 2

சத்குரு அவர்கள் காசி நகரம் சென்று அங்கு நிலவும் சக்தி நிலையையும் அதன் பின்னாலிருந்து செயல்படும் தொழில்நுட்பத்தையும் உள்ளுணர்வால் உணர்ந்து வெளிப்படுத்த, இதோ உங்கள் திரையில், காசியின் ரகசியங்கள் அம்பலமாகின்றன!

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 1

‘காசிக்குப் போறேன்’ என்று நீங்கள் சொல்லியவுடன், ‘ஏன் என்னாச்சு…?’ ‘அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்கு…’, ‘ஏன் சன்யாசி ஆயிடலாம்னு முடிவு பண்ணீட்டியா?’ என விமர்சனக் கேள்விகள் காத்திருக்கும். உண்மையில் ‘காசி வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்ட இடமல்ல, வாழ்வை ஆழமாக உணருவதற்காக’ எனும் உண்மையை உணர்த்துகிறது இந்தத் தொடர்.