சத்குரு:

இந்தக் கலாச்சாரத்தில் பின்பற்றி வந்த தர்மத்தின்படி ஒவ்வொருவரும் தங்களுக்கென்று பிரத்தியேகமாய் ஒரு வழிமுறையை உருவாக்கிக்கொள்ள முடியும். உங்கள் மனைவியை, உங்கள் குழந்தையை, உங்கள் கணவரை அல்லது ஒரு பாறையை என்று எதை வேண்டுமானாலும் வணங்கிக்கொண்டு அதே தர்மத்தில் இருக்க இயலும். இங்கு மதங்களுக்கு முன்பு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை. வெளியிலிருந்து வந்த மதங்கள் காரணமாகத்தான் இங்கு இன்று மதங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் இந்தக் கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் தர்மம் ஒரு சமயமாக இருக்கவில்லை. இது ஒரு வாய்ப்பாகத்தான் மக்களுக்கு இருக்கிறது. ஆன்மீக வளர்ச்சிக்கு அடிப்படையான சுதந்திரம் இங்கு வழங்கப்படுகிறது.

“கடவுளாலோ மனிதனாலோ செய்யப்பட வேண்டிய அனைத்துமே இந்த தேசத்தில் செய்யப்பட்டிருக்கிறது” -மார்க் ட்வெயின்

ஞானோதயம் அடைவதும் ஆன்மீகத்தில் வளர்வதும் ஆசிய கண்டத்தில் மட்டுமே சாத்தியமா என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. இது உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிகழ்கிற ஒன்றுதான். ஆனால் பல மேலை நாடுகளில், எதை தர்க்கரீதியாக புரிந்துகொள்ள முடியவில்லையோ அவை எல்லாம் தவறானவை என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஆன்மீக வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டிய ஆயிரக்கணக்கான பெண்கள் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார்கள். இயேசு, மன்சூர், சாக்ரடீஸ் என்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்தியாவில் அத்தகைய கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதில்லை. அதிகபட்சமாக உங்களை வாதிட அழைப்பார்கள். எனவே ஆன்மீகத்திற்குரிய இடமாக இந்த தேசம் காலம்காலமாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆன்மீகத்தில் வளர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்குரிய வாகனத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நிலவுக்குப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள் மாட்டு வண்டியில் போக முடியாது. ஆன்மீகமும் அப்படித்தான். அதற்கான வாகனத்தை, கருவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஐம்புலன்களைக் கடந்த கருவி உங்களுக்குத் தேவைப்படுகிறது.

ஞானோதயம் அடைவதும் ஆன்மீகத்தில் வளர்வதும் ஆசிய கண்டத்தில் மட்டுமே சாத்தியமா என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. இது உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிகழ்கிற ஒன்றுதான். ஆனால் பல மேலை நாடுகளில், எதை தர்க்கரீதியாக புரிந்துகொள்ள முடியவில்லையோ அவை எல்லாம் தவறானவை என்று முத்திரை குத்திவிடுவார்கள்.

அந்தக் கருவிக்கு ஆண் பெண் பேதம் கிடையாது. அமெரிக்கரா இந்தியரா என்று அது பார்க்காது. நீங்கள் உங்கள் காரை ஓட்டுகிறபோது நீங்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும் அந்தக் கார் ஓடுகிறது அல்லவா? அதேபோலத்தான் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் சமூகம் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் மட்டுமே கேட்கப்படுகிற கேள்விகள். ஆன்மீகம் என்று வரும்போது அவற்றிற்கெல்லாம் எந்த சம்பந்தமும் இல்லை. நமது ஈஷா யோக வகுப்புகளுக்கு பல நாட்டைச் சேர்ந்தவர்களும் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இவர்களிடையே எந்த பேதமும் இல்லை. ஏனென்றால் ஆன்மீகம் என்பது பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவான உண்மை.

இந்தியாவின் ஞான மார்க்கம் குறித்து கேள்விப்பட்ட மார்க் ட்வெயின், அதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு இந்தியா வந்தார். தகுந்த ஒருவர் துணையோடு இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றார். மூன்று மாத காலம் சுற்றுப்பயணம் செய்துவிட்டு திரும்பும்போது அவர், “கடவுளாலோ மனிதனாலோ செய்யப்பட வேண்டிய அனைத்துமே இந்த தேசத்தில் செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.