Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற தேவையே இல்லாமல் போனவர்தான் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பவர்.
உடலும் மனமும் ஆழமாக இணைந்துள்ளன. உடல் அசைவற்ற தன்மைக்கு வரும்போது, மனமும் இயல்பாகவே பின்தொடரும்.
ஞானோதயம் என்பது ஒளி பற்றியது அல்ல - ஒளியையும் இருளையும் கடந்த தரிசனம் பற்றியது.
அன்பு இன்னொருவரைப் பற்றியது அல்ல. அன்பு என்பது செய்யப்படும் ஒன்று அல்ல. அன்பு - நீங்கள் இருக்கும் நிலை.
விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதின் விளைவுதான் பயம். பயத்தில் இருப்பது நமக்கு பாதுகாப்பு அல்ல. விழிப்புணர்வாக இருந்தால்தான் நாமாகவே வாழ்க்கையை கட்டமைக்க முடியும்.
பெண்மை என்பது வாழ்வின் சக்திமிக்க பரிமாணம். சக்தி என்பவள் இல்லையென்றால், படைப்பில் எதுவுமே இருக்காது.
தேவியின் அருளுக்கு பாத்திரமானவர் பெரும் பாக்கியசாலி.தன் திறனுக்கும், ஆற்றலுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்வார்.
மனிதராக இருப்பது என்றால் - இயற்கையின் விதிகள் என்று நினைக்கப்படும் விஷயங்களைத் தாண்டி, நம்மை விட மிகப்பெரிய ஒன்றை நிகழவைக்கும் திறன் கொண்டிருப்பது.
நவராத்திரி விழாவை, கோலாகலமாக அணுகுவதே சிறந்தது. வாழ்வின் இரகசியம் இதுதான்: எதிலும் சீரியஸாக இல்லாமல், அதேசமயம், பரிபூரணமாக ஈடுபட்டு இருப்பது.