ஈஷா கிராமோத்ஸவம் என்பது கிராமப்புற சமூகங்களில் மறுபடியும் உற்சாகத்தையும் உயிரோட்டத்தையும் கொண்டு வரும் முயற்சி என்று சத்குரு கூறுகிறார். வேகமாக அழிந்து வரும் கிராமப்புற இசை, கலைகள் மற்றும் பல அம்சங்களை அது உள்ளடக்கியிருக்கிறது என்றும் ஒரு காலத்தில் உலகத்திலேயே எழுச்சி மிக்கதாக இருந்த நமது பொருளாதாத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரமிது என்றும் அவர் விளக்குகிறார்