Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
வாழ்வின் மிக அழகான விஷயங்கள் - காதல், இசை, நடனம், புது உருவாக்கம், சிரிப்பு - இவை எல்லாமே நான் என்பதை தள்ளி வைத்தால் மட்டுமே நடக்கும். தன்னைப் பற்றிய கவலையற்ற நிலையில் இருப்பதன் ஆனந்தத்தையும், பரவசத்தையும் உணர்வீர்களாக!
உலகத்தை பற்றி தகவல் சேகரிக்க Internet எனும் வலை போதும். ஆனால், உயிரை உணர, வாழ்க்கையின் ஆழத்தை அனுபவத்தில் பிடித்துக்கொள்ள - நமக்குள்ளே InnerNet அவசியம்.
பக்கத்தில் இருப்பவரிடம் அன்பாக இருப்பதுதான் பெரிய சவால். இங்கு இல்லாத ஒருவரிடம் அன்பாக இருப்பது எப்போதும் சுலபம்.
உடலில் உணரும் வலியை பற்றி நாம் தீர்மானிக்க ஒன்றும் இல்லை. ஆனாலும், அதனால் துன்பப்படாமல் இருக்க முடியும் - அந்த வாய்ப்பு எப்போதும் நம் கையில் உள்ளது.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது இல்லை விஷயம். உங்களுக்குள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறீர்கள் என்பதே முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், அதனால் ஆகச்சிறந்ததை செய்கிறது. மனிதன் மட்டும்தான் தயங்குகிறான்...
ஆன்மீக பரிமாணம் இல்லாத ஒன்று இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. இங்கிருக்கும் அனைத்துமே ஆன்மீகம்தான், ஆனால் உணரப்படாமல் இருக்கிறது.
ஒரே நேரத்தில் பரிபூரண தீவிரத்துடனும், முழு தளர்வுடனும் இருப்பதுதான் யோகத்தின் அடிப்படை.
ஆன்மீகத்தில் இருக்க ஏதோ மலை குகைக்கு போகத் தேவையில்லை. ஆன்மீகம் என்பது வெளியே நடப்பதை பற்றியதே அல்ல - அது உங்களுக்குள் நிகழ்வது.
இங்கே நலமாக வாழவும், இந்த வாழ்வை கடந்த முக்திக்கும் - அனைத்திற்கும் வழி நமக்குள்ளேயே இருக்கிறது.
நீங்கள் செலவிடும் நேரத்தில் - பிழைப்பிற்கான விஷயங்களுக்கு எவ்வளவு, ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு எவ்வளவு என்று கவனியுங்கள். நேரம் - அது பணம் அல்ல, அது உயிர் ஆகும்.