Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
என்ன கிடைக்கும் கிடைக்காது என்று கவலைப்படாமல், உங்களை முழுமையாகக் கொடுக்கும்போதுதான் வாழ்க்கை அழகாகிறது. வாழ்க்கையின் ஆனந்தம் நம்மை முழுமையாக வெளிப்படுத்துவதில்தான் இருக்கிறது, எதையோ வேண்டிக் கெஞ்சுவதில் இல்லை.
மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருக்கும் தகவல்கள்தான் உங்கள் எண்ணங்கள். முற்றிலும் புதிதாக எதுவும் இங்கு ஒருபோதும் நடக்க வாய்ப்பே இல்லை.
உங்கள் வேலை முக்கியமானது என்று நீங்கள் நினைத்தால், உங்களை மேம்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது.
தனக்குள் இருக்கும் அசைவற்ற நிலையை உணராதவர், இயங்குவதிலேயே தொலைந்து போவார்.
சிரமம் என்பது நாம் கடந்து போகும் ஒரு சூழ்நிலை. ஆனால், துன்பம் என்பது மனத்திற்குள் நாமாக உருவாக்கிக் கொள்ளும் ஒரு நிலை.
நான் உணர்ந்த அனைத்தும், என் குரு உணர்ந்த அனைத்தும், முழு ஆன்மீகப் பாரம்பரியம் உணர்ந்திருந்த அனைத்தும், தியானலிங்கத்தில் சக்தி வடிவில் உள்ளது. நான் அதன் வெளிப்பாடு மட்டுமே
நீங்கள் தனிமையாக உணர்வது, தனியாக இருப்பதால் அல்ல. உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் விலக்குவதால்தான் தனிமையாக உணர்கிறீர்கள்.
கடவுளை நம்புபவர்களும், நம்பாதவர்களும் ஒரே படகில்தான் இருக்கிறார்கள். ஒருவர் இருக்கிறது என்று நம்புகிறார்; மற்றொருவர் இல்லை என்று நம்புகிறார். இருவருமே, "எனக்குத் தெரியவில்லையே!" என்று ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
நமக்கு என்ன கிடைக்கிறது என்பதை கொண்டு வெறும் பிழைப்பை மட்டும்தான் நடத்த முடியும். நாம் எதை கொடுக்கிறோம் என்பதை கொண்டுதான் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும்.
யோகா என்பது அதிசய மனிதராக ஆவது பற்றியதல்ல. இது, மனித உயிராக இருப்பதே அதிசயமானது என்பதை உணர்ந்துகொள்வது.