ஆன்மீகப் பாதையில், காத்திருத்தல் என்பது மிகப் பிரமாதமான குணமாக போற்றப்படுகிறது. ஆனால், சிறிது காலத்திற்கு பிறகு, "இதற்கு ஏன் காத்திருக்க வேண்டும், இப்போதே இது நடந்தால் என்ன?" என்று இன்ஸ்டன்ட் யுக காரண அறிவு வழக்கம் போல கேள்வி கேட்கத் துவங்கிவிடும். காத்திருப்பது ஒருவருக்கு ஏன் சுமையாக தெரிகிறது என்பதற்கு உளவியல் ரீதியான காரணத்தை சுட்டிக் காட்டுகிறார் சத்குரு.