FILTERS:
SORT BY:
நீங்கள் யார் என்பதை சூழ்நிலைகள் நிர்ணயிக்க அனுமதிக்காமல், சூழ்நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நிர்ணயிக்கும் போது – அதுதான் "வெற்றி" என்பது.
வாழ்க்கை என்பது - நாம் என்ன செய்கிறோம் என்பதை பற்றியது அல்ல - அதை எப்படி செய்கிறோம் என்பதை பற்றியதே ஆகும்.
வாழ்க்கை என்பது அதன் குறிக்கோளில் அல்ல. வாழ்க்கை என்பது அதன் நிகழ்வில் இருக்கிறது – இந்தக் கணத்தில் அதை உங்களுக்குள் எந்த விதமாக உணர்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.
நாளை என்பது ஒருபோதும் வரப்போவதில்லை. வாழ்க்கையின் அழகே அதுதான் – இன்றைய பொழுதைக் கையாள்வது எப்படி என நீங்கள் கற்றுக் கொண்டால் போதும் – இந்த ஒரு நாளை மட்டும், இந்த ஒரு கணத்தை மட்டும்.
ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் தெளிவான நோக்கமும், நிலையான உறுதியும், சரியான நடவடிக்கை எடுக்கும் தைரியமும் கொண்டு, அதை அக்கறையுடன் வளர்க்க வேண்டும். பாரதம் உலகிலேயே உயிர்ப்பு மிக்க நாடாக வளர நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம்.
புதிய சூழ்நிலைகள் உருவாகும்போது – அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் – அதை அரவணைத்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் எதிர்ப்பு குறையும்போது, இன்னும் திறம்படவும், துரிதமாகவும் செயல்படுபவராக மாறுவீர்கள்.
நீங்கள் 'லாஜிக்' என்பதின் அடிமையாக மாறும்போது, வாழ்க்கையின் 'மேஜிக்' என்பதை தவற விட்டுவிடுவீர்கள். மனிதர்கள் பகுத்துப் பார்க்கும் புத்தியின் வரம்புகளைத் தாண்டி, நாம் இங்கு உயிருடன் இருப்பதின் நிஜமான அற்புதத்தை உணரச் செய்வதுதான் என் வேலை.
நீங்கள் உயிரோட்டமாக இருந்தால், நான் எப்போதுமே இருக்கிறேன் – உங்கள் வாழ்நாள் முழுவதும், அதற்கு அப்பாற்பட்டும். என் உடலை விட்ட பிறகும், நான் இருப்பேன்.
கல்வியில் ஊக்கம் என்பது அவசியம், வெறும் தகவல் மட்டும் போதாது. ஊக்கம் கொண்ட மனிதர்களால் மட்டுமே தங்கள் வாழ்வையும், சுற்றி உள்ளவர்களின் வாழ்வையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும்.
வளம் என்பது கார், வீடு, உடைகள் பற்றியது அல்ல. உண்மையான வளம் என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, அன்பாக, பேரானந்தமாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது.