Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
தன்னம்பிக்கை என்பது தெளிவு இல்லாவிட்டால் எப்போதுமே பேரழிவானது.
மண் என்பது விவசாயத்தைப் பற்றியது மட்டுமல்ல; அது உயிரைப் பற்றியது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளே உயிருக்கு அடித்தளமாகும். அவை செழிக்காவிட்டால், நாம் செழிக்க வழி இல்லை.
சரி தவறு, பிடித்தது பிடிக்காதது என்பதன் எல்லைக்குள் சிக்கியிருக்கும் ஒருவர் ஒருபோதும் அன்பின் தன்மையை உணரமாட்டார்.
அனைத்தும் அதே மூலத்திலிருந்து வருகிறது. உங்களை தனியொருவராக இல்லாமல் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பாகமாக உணர்ந்தால் மட்டுமே நீங்கள் முற்றிலும் இலகுவான நிலைக்கு வருவீர்கள்.
வாழ்க்கையை வளமானதாகவும் நிறைவானதாகவும் மாற்றுவது செயலின் அளவு அல்ல, உங்கள் அனுபவத்தின் ஆழமே.
ஆண்தன்மையும் பெண்தன்மையும் நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதன் இரண்டு அம்சங்கள். நீங்கள் ஒரு பகுதியுடன் மட்டும் அதிகமாக அடையாளப்பட்டிருந்தால் பாதி உயிராக இருப்பீர்கள்.
புதிய மற்றும் சவாலான சூழ்நிலைகள் சாத்தியங்களே தவிர பிரச்சனைகள் அல்ல. புதிதாக உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால் அதுதான் பிரச்சனை.
உங்கள் மனம், உடல் மற்றும் உயிர்சக்தியின் மீது நீங்கள் இன்னும் சற்று ஆளுமையைக் கொண்டுவந்தால், உங்கள் விதியை நீங்களே தீர்மானிக்க முடியும்.
தலைவராக இருப்பது என்றால் சூழ்நிலையின் மீது ஆதிக்கம் செலுத்துவது அல்ல. அது மக்கள் அவர்களது கற்பனையிலும் நினைத்துப்பார்க்காத விஷயங்களைச் செய்யும் வல்லமையை அவர்களுக்கு வழங்குவது.
பக்தி என்றால், உங்கள் மூச்சு, வேலை, மக்கள், பூமி, இந்த பிரபஞ்சம் என்று நீங்கள் இப்போது தொடர்பில் இருக்கும் அனைத்துடனும் கலந்துவிடுவதற்கான ஒரு வழி.