வசந்தம் வந்துவிட்டது
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சென்றவாரம் நியூயார்க்கிலும் டொரன்டோவிலும் நடந்த நிகழ்ச்சிகள் குறித்து பகிர்வதோடு, அமெரிக்க ஆசிரமத்தில் பௌர்ணமியன்று துவங்கவிருக்கும் சம்யமா குறித்தும் சத்குரு கூறுகிறார். அதோடு இந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும், அங்கு வசந்தத்தின் வரவை அறிவிக்கும் சில காட்சிகளையும் தொகுத்துள்ளோம்.
ஊதா, சந்தனம், வெள்ளை, நீலம் - வசந்தத்தின் வரவை வெளிப்படுத்தும் மென்மையான வண்ணங்கள். டென்னிஸி பகுதியில், இலைகள் துளிர்ப்பதற்காக வெறுமையான கிளைகளை ஏந்தி ஏக்கத்துடன் மரங்கள் காத்திருக்கின்றன. இங்கு அமெரிக்க ஆசிரமத்தில், சம்யமா நிகழ்ச்சிக்கான ஆயத்தப்பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. இங்கு இதற்குமுன் 2010ல் தான் கடைசியாக சம்யமா நடந்தது என்பதால், மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சியை எதிர்நோக்கி இருக்கிறார்கள். கடந்த 8 வருடங்களாக வட அமெரிக்கா காத்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, 900க்கு அதிகமான மக்களை மஹிமா ஹால் கொள்ளாது என்பதால், ஆர்வமான ஆன்மீக சாதகர்கள் பலருக்கு இந்நிகழ்ச்சிக்கான வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
Subscribe
இரண்டு மாதத்திற்குள்ளாகவே இரண்டாவது சம்யமாவிற்குச் செல்கிறேன். சம்யமா என்னை வெகுவாக பதம்பார்த்துவிடும். பங்கேற்பாளர்கள், ஆன்மீக சாதனையில் ஈடுபட்டு தங்களை தேவையான விதத்தில் தயார்செய்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம், அப்படிச் செய்திருந்தால் அது என்மீதுள்ள சுமையை சற்றே குறைக்கும். சம்யமா ஒரு நிகழ்ச்சியல்ல, அது ஒரு பிரம்மாண்டம். இந்த பிரம்மாண்டமான நிலையில் கனிசமான எண்ணிக்கையில் மனிதர்கள் இருந்தால், முற்றிலும் புதியதொரு சாத்தியத்தை கட்டவிழ்க்க முடியும். எதிர்காலத்தில், அதிக எண்ணிக்கையில் மக்கள் இதைப் பற்றி அறிந்து, அனுபவத்தில் உணர்ந்து, இந்நிலையை அடையும் விதமான ஒரு வாய்ப்பினை நாம் உருவாக்க வேண்டும். இந்த சாத்தியத்தைப் பரிமாறுவதற்கு ஏற்ப, பொருள்நிலையில் என் உடலையும் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.
உலக தண்ணீர் தினத்திற்காக ஐ.நா.வில் நடந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, டொரன்டோவில் அற்புதமானதொரு Mystic Eye நிகழ்ச்சி நடந்தது. பூமியில் நீர்வளத்தின் நிலையான மேம்பாட்டிற்காக பத்தாண்டு செயல்திட்டம் ஒன்றை நாம் துவங்கியிருப்பது அற்புதம். நியூயார்க் நகரத்தில் ஒருநாள் கடுமையாக பனிபொழிந்தது. ஆனால் இங்கு டென்னிஸி நகரத்தில், வசந்தம் அடுத்த இரண்டு வாரங்களில் வெடிப்பதற்குத் தயாராக இருக்கிறது.
பௌர்ணமி தினத்தில் சம்யமா துவங்குகிறது.
அனைவரும் நிறைவை உணர்வீர்களாக!