மிக துடிப்பான ஒரு சம்யமாவின் நிறைவில், அமெரிக்காவிலுள்ள iii ஆசிரமத்தில் ஒரு மென்மையான அதிர்வு படர்ந்தது. மனிதனின் பல்வேறு தன்மைகளை சம்யமா சோதிக்கிறது. உடலளவிலும் மனதளவிலும் ஒருவரின் தாக்குப்பிடிக்கும் சக்தியை சம்யமா சோதிக்கிறது. மனதில் மண்டிக்கிடக்கும் பல குப்பைகளைக் களைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உடல் எந்த அளவு ஆனந்தம் தரக்கூடியது என்பதை இது உணர்த்தக்கூடியது. ஒருவர் உடலில் ஆனந்தம் இல்லாவிடில், நீண்டநேரம் தியானத்தில் அமர்ந்திருப்பது சொல்லமுடியாத வலியைத் தருவதாக மாறமுடியும்.

உடலில் ஆனந்தம் இல்லாவிடில், நீண்டநேரம் தியானத்தில் அமர்ந்திருப்பது சொல்லமுடியாத வலியைத் தருவதாக மாறமுடியும்.
சம்யமா, பன்முகம் கொண்ட பட்டகம் போன்ற மனதை, உள்ளதை உள்ளபடி காட்டும் வெற்றுக் கண்ணாடியாக மாற்றும் அற்புதமான ஒரு செயல்முறை. அதாவது, சதா சர்வகாலமும் மனதளவில் நாடகங்கள் நடத்தி, மிக சாதாரண விஷயங்களை சர்க்கஸ் சாகசங்களைப் போல சிக்கலாக்குவதை விடுத்து, தெளிவிற்கான ஒரு கருவியாக மனதை மாற்றுகிறது. ஒவ்வொருவரும் தாங்களே உருவாக்கியவற்றின் ஏற்ற இரக்கங்களை எதிர்கொள்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சம்யமா என்பது, மனக் கட்டமைப்பின் மாயையைக் கடந்த தெளிவு. எட்டு நாட்களுக்கு 900க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள, சக்தியளவிலான நெருக்கத்திற்கு உயிர்சக்தியை விலையாய் கொடுக்கத் தேவையான சம்யமாவின் நிறைவிற்குப் பிறகு, அன்று மதியமே இன்னொரு நிகழ்ச்சிக்காக அகஸ்டா நகரத்திற்குப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அகஸ்டாவில், இந்திய கால்ஃப் விளையாட்டின் வளரும் நட்சத்திரமான சுபாங்கர் ஷர்மாவை கௌரவிக்கும் டின்னர் நிகழ்ச்சி. அடுத்தநாள் அகஸ்டா மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் நான் இருந்தது, அதனோடு கிடைத்த போனஸ். பல பிரசித்தி பெற்ற கால்ஃப் நட்சத்திரங்கள் விளையாடுவதைக் காண்பது விருந்தாக அமைந்தபோதும், ஜான் எஃப் கென்னடி நகரத்திலிருந்து பெங்களூரு செல்லும் விமானத்தைப் பிடிக்க, பாதியில் நான் விடைபெற வேண்டியிருந்தது. அங்கிருந்து சூறாவளியைப் போல பல்வேறு நிகழ்ச்சிகள்.

அமராவதி நகரத்தில் நிகழ்ந்த Happy Cities மாநாடு - தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரின் கனவு நிறைவேற மிகப்பெரிய நிதியும் மக்களின் பங்கேற்பும் தேவைப்படுகிறது. சில மணிநேரங்களில் அமராவதிக்குச் சென்று திரும்பி, சிங்கப்பூருக்கு பல்துறை நிபுணர்கள் கலந்துகொள்ளும் Hindustan Times Leadership Summit நிகழ்ச்சிக்குப் பயணமானேன். இந்த நிகழ்ச்சிக்காகத்தான் முதலில் பயணத்தை திட்டமிட்டிருந்தோம், பின்னர் அமராவதி நிகழ்ச்சியும் கோலா லம்பூர் நிகழ்ச்சியும் சேர்ந்துவிட்டது.

கோலா லம்பூரில் நடந்த ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை நிகழ்ச்சியை குறுகிய கால அவகாசத்தில் திட்டமிட்டதால், பலர் கலந்துகொள்ள முடியாமல் ஏமாற்றமடையும் விதமாக, 2000 பேர் மட்டுமே அமரக்கூடிய இடம்தான் கிடைத்தது. கோலா லம்பூர் நகரத்தில் நடந்த ஷாம்பவி தீட்சை நிகழ்ச்சி, உண்மையாகவே உலக கிராமத்தைப் போல காட்சியளித்தது - பல்வேறு தேசங்களையும் இனங்களையும் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்கள் - நீங்கள் நினைத்துப் பார்க்ககூடிய அனைத்து முகங்களும் அங்கு இருந்தன. சீன தேசத்திலிருந்து வந்திருந்த மக்கள் கூட்டம், இது கிழக்கத்திய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் ஈஷாவின் கொள்கையோ என்னவோ என்று தோன்றச்செய்தது. ஆறு நாட்களில் நான்கு தேசங்களில் நிகழ்ச்சிகள் என்றால் நிறைய விமானப் பயணம். விமான நிலையங்களில் அதிக நேரமும், கூடவே கடினமான பாதுகாப்பு சோதனைகளும் - அதிலும் இம்மிகிரேஷன் அதிகாரிகள், கடவுச்சீட்டிலுள்ள stamp தவிர எதையும் பார்க்கமுடியாது என்றாலும், ஊடுருவும் X-ray கண்கள் கொண்டவர்கள் போல உங்களைப் பார்ப்பார்கள்.

சிங்கப்பூரில், சான் ஃபிரான்சிஸ்கோ செல்லும் விமானத்திற்காக காத்திருக்கிறேன். இங்கு தன்னார்வலர்கள் குழு ஒன்றை செயலில் சுழன்று உடல் சோர்ந்துபோகச் செய்துவிட்டேன்; கலிஃபோர்னியாவில் என்னால் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன்...


Love & Grace