காலபைரவ கர்மா - இது உடலிற்கு அல்ல!
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், இறந்த உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுத்தால், இறுதிக் காரியங்களைச் செய்வதில் அர்த்தமுள்ளதா என்ற ஒருவரின் ஐயத்தைக் களைகிறார் சத்குரு.
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், இறந்த உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுத்தால், இறுதிக் காரியங்களைச் செய்வதில் அர்த்தமுள்ளதா என்ற ஒருவரின் ஐயத்தைக் களைகிறார் சத்குரு.
Subscribe
இன்றைய சமுதாயத்தில் சில விஷயங்கள் பற்றி பேசுவது அரசியல்ரீதியாக சரியாக இருக்காது. ஆனால் இதில் பல விஷயங்கள் இருக்கின்றன. பொருள்நிலையில் இருக்கும் இந்த உடல்வடிவோடு கொண்டுள்ள ஆழமான அடையாளத்தால் இவை அனைத்தும் வந்துவிட்டன. இதைப் பற்றி நான் எந்தவொரு கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் மனிதர்கள் உயிர்வாழ்வது முக்கியம். மனிதர்களை உயிர்வாழ வைப்பதற்காக எல்லாம் செய்யப்படுகின்றன, அதில் தவறேதும் இல்லை. யாருக்குத் தெரியும், நீங்கள் யாருடைய உடல் உறுப்புடன் இப்போது அமர்ந்திருக்கிறீர்களோ!
உடலிற்கு காலபைரவ கர்மா அவசியமில்லை. உடல் எரியூட்டப்பட்டு மண்ணிற்குத் திரும்பிட வேண்டும். உடலின் ஓரிரு பாகங்கள் சிறிது காலம் வேலை செய்யக்கூடியதாக இருந்தால், சரியாக வேலை செய்யாத வேறொரு இயந்திரத்தில் பொருத்தப்படலாம். காலபைரவ கர்மா என்பது, உடலை விட்டுப் பிரிந்திருக்கும் அந்த பரிமாணத்திற்காகச் செய்யப்படுவது. உடலுடன் தொடர்பில் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கேட்பதற்குக் காரணம், உடலிற்கு ஞாபகங்கள் இருக்கின்றன. இவ்விரு பரிமாணங்களுக்கும் இடையிலான தொடர்பை அடையாளம் கண்டுகொள்வதற்காகவே அவருடைய துணியையோ புகைப்படத்தையோ நாம் பயன்படுத்துகிறோம்.
இறந்தபின் நாம் உடலுக்கு எதுவும் செய்வதில்லை. அதில் எந்த அர்த்தமுமில்லை. அது உடலுக்கானதாக இருந்திருந்தால், அவர் உயிருடன் இருக்கும்போதே செய்திருப்போம். இன்னும் மிதந்துகொண்டு இன்னொரு உடலைத் தேடிக்கொண்டு இருக்கும் அந்த ஞாபகங்களின் குமிழியைப் பற்றியதே காலபைரவ கர்மா. அந்த உயிருக்குள் கொஞ்சம் புத்தி கொண்டுவருவதற்காகவே இந்த செயல்முறை. ஏனென்றால் அவர் உடலுடன் இருந்தபோது எதையும் கேட்கத் தயாராக இல்லை. அவருக்கு இப்போது பகுத்துப் பார்க்கும் மனம் இல்லாததால், தர்க்க மனத்தை இழந்த ஓர் உயிருக்கு நாம் இன்னும் நிறையவே செய்திடமுடியும். பிரித்துப் பார்க்கும் புத்தி இல்லாமல் போனால், இதுவரை இருந்த சல்லடை இப்போது இல்லாமல் போய்விடுகிறது. இப்போது இது ஒரு திறந்த துவாரம், நாம் என்ன வேண்டுமானாலும் இதற்குள் போடமுடியும். ஒரு சல்லடை இருந்தால் அது உங்களுக்குப் பிடிக்காதவற்றைப் பிடித்துவைத்துவிடும். அதில் கிட்டத்தட்ட பிரபஞ்சம் முழுவதுமே வெளியே நின்றுவிடும். நிச்சயமாக சிவன் வெளியில் தான் இருப்பார்!
ஒருவிதத்தில் பார்த்தால், தியானம் என்பது முழுவதுமே சாவைப் போன்ற சூழ்நிலையை உருவாக்கத்தான். சாவு என்றால் உடல் ஒரு பிரச்சனையாக இல்லை, பிரித்துப் பார்க்கும் மனமும் இல்லை. உங்கள் பகுத்தறிவு என்பது கடந்தகால அனுபவத்தையும் அதன் தாக்கங்களையும் வைத்து வருவது. ஒருவருக்கு இன்னொருவரை விட மேம்பட்ட பகுத்தறிவு இருக்கக்கூடும், ஆனால் அதன் உண்மையான தன்மையயில், அடிப்படையாகவே பிரித்திட முடியாத ஒன்றை நீங்கள் பிரித்துப் பார்க்கிறீர்கள். உண்மையான புரிதலில் இருந்து விலகி, உடனடியாக அர்த்தம் தருவதற்கு விழுவதே பகுத்தறிவு.
இறந்தவருக்கும் இறந்த உடலுக்கும் இடையிலான வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். மருத்துவக் கல்லூரிக்கு இறந்த உடலின்மீது மட்டும்தான் ஆர்வம், இறந்தவர் மீது அல்ல. இறந்தவர்களுக்கு அவர்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை. காலபைரவ கர்மா என்பது இறந்தவர்களுக்கானது, இறந்த உடலுக்கானதல்ல.