என் யோகா

சப்தங்கள், மௌனம் பற்றிய உணர்வு
அனைத்தையும் இழந்தேன். இடைவிடா இரைச்சலின் நடுவில் நான் முழு சமநிலையில் இருக்கிறேன்.
தாளாத வலி, ஆழ்ந்த இன்பத்துடன் பிணைந்திருக்கிறது.
பிரியமான ஒருவரின் இழப்பால் வரும் துயர்,
நிச்சலனத்தின் வெறுமையையும் கொண்டுவருகிறது.
அதனோடு வளரும் கனியின் ருசியையும்
அது மலர உதவும் மலரின் வாசனையையும்
அறியாத நிலையில் இலை இருக்கும் இந்த உலகத்தில்...
இதோ நான், மேல்புறத் தோலிலேயே
மையத்திலுள்ள மூலத்தின் இனிப்பை
ருசித்தபடி இருக்கிறேன்.
புனிதமும் அசிங்கமும் பற்றிய உணர்வு
அனைத்தையும் இழந்தேன்.
ஓ ஷம்போ, நான் உன்னை அரவணைத்த நாள் முதல்
மேல்புறத் தோலிலுள்ள சிறுபுள்ளி
மையக்கருவைப்போலத் தெரிகிறது.
பள்ளத்தாக்குகள் சிகரங்களாகிவிட்டன.
இரைச்சல் மிகுந்த குழப்பநிலையாய் இருந்திருக்க
வேண்டியது, தெளிந்த ஓடையாகத் தெளிந்துவிட்டது.
நான் ஆணுடன் ஆணாக
பெண்ணுடன் பெண்ணாக
பிராணியுடன் பிராணியாக
பூதங்களின் மத்தியில் பூதமாக இருக்கிறேன்.
உன்னுடன் நான் நீயாகவே இருக்கிறேன்
என்று தெரிந்துகொள்!

sadhguru signature

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.