அனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு

அமொரிக்காவில் இயங்கிவரும் ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில், சத்குரு அவர்கள் 200 பங்கேற்பாளர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 3- மாதங்கள் அனாதி நிகழ்ச்சியை நடத்தினார். அனாதி என்றால் "தொடக்கமற்றது" என்பது பொருள். சத்குரு:மேற்காசியாவின் ஆச்சரியப்பட வைக்கும் காட்சிகளைக் கண்டு இலயித்து, நாசிக்கினிய சுகந்தங்களையும் மற்றும் நாவின் சுவைமொட்டுக்களுக்கு நல்விருந்தையும் வழங்கிய பிறகு, இப்போது நான் இங்கிருக்கிறேன். மிகத் தீவிரமான ஒரு ஆன்மீக சூழ்நிலை இங்கு நிலவுகிறது. தீவிரமான சாதகர்களுக்கான, 90-நாள் அனாதி நிகழ்ச்சியில் இருக்கிறோம். அனாதி என்பது, முற்றிலும் வித்தியாசமான நிலையிலான சாதனா மற்றும் தேடுதலை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதைப் பற்றியது.ஏறக்குறைய 500- கோரிக்கை மனுக்களை சலித்தெடுத்த பிறகு, 200- பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்தோம். இது உடலளவிலும், மனதளவிலும் மிகுந்த பிரயாசைக்குட்பட்டது. எல்லாவற்றுக்கும் மேல், அதற்கு அதீதமான பயிற்சி தேவைப்படுகிறது. அனேகமாக, இன்று வரை உலகின் எந்தப் பகுதியிலும் இந்த விதமான சாதனாவும், தேடுதலும் ஒரு போதும் நிகழ்ந்திருக்கவில்லை - குறைந்தபட்சம் எனது அறிதலுக்கு உட்பட்ட வரை. இதனை உணர்வதற்கு ஆயத்தமாகியிருக்கும் அமெரிக்க தியான அன்பர்களைக் காண்பது மகத்தானதாக உள்ளது; இங்கு வருவதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு மதிப்பு மிக்க ஏதோ ஒன்றைத் தியாகம் செய்யவேண்டியிருந்திருக்கும் என்பதை நான் நிச்சயம் அறிந்துள்ளேன். மகத்தான வலிமை, குணாதிசயம், பொறுப்புணர்வு மற்றும் அனைத்திற்கும் மேல் தெளிவுடன் கூடிய ஆன்மீகத்தன்மையுள்ள ஆழ்ந்த அறிவுடைய மக்களை உருவாக்கும் நம்பிக்கையில் இது நிகழ்கிறது. இதன் ஒரு பகுதியாக 400- பங்கேற்பாளர்களுக்கு சுமார் 25- தன்னார்வலர்களின் சேவையுடன்- 10- நாள் சம்யமா நிகழ்ச்சியையும் நடத்துகிறோம். செயல்பாடுகள் எப்படி மேற்கொள்ளப் படுகின்றன என்பதைக் காண்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. சம்யமாவின்போது புத்த பூர்ணிமா நிகழவிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டவசமானது கௌதமர் ஞானமடைந்தபோது,ஒரு மாபெரும் ஆன்மீக அலைக்கு அடிப்படையாகி, மனித குலத்தின் மீது நிலையான அடையாளமாக விட்டுச் சென்றது .

முழு பதிவையும் ஈஷா ப்ளாகில் வாசிக்கவும்