ஈஷா யோக மையம்
கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், உள்நிலை பரிமாற்றத்தையும் நல்வாழ்வையும் நாடி வருபவர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த இடமாக விளங்குகிறது!
தென்னிந்தியாவில் உள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி, மலையடிவாரத்தில் ஈஷா யோக மையங்களின் தலைமை மையம் அமைந்துள்ளது. இந்த மையம் பிரம்மச்சாரிகள், முழு நேரத் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் விருந்தினர்களின் உறைவிடமாகவும் இருக்கிறது. சத்குருவினால் உருவாக்கப்பட்ட இந்த இடம், ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்ததாகவும் நான்கு வித யோகப் பாதைகளான ஞான யோகம், கர்ம யோகம், க்ரியா யோகம் மற்றும் பக்தி யோகம் ஆகியவற்றை தனிச் சிறப்புடன் மக்களுக்கு வழங்குவதாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும், ஆயிரக்கணக்கான மக்கள் உடல், மன நலம் தேடி இங்கே கூடுகிறார்கள்.
தியானலிங்கம் தான் ஈஷா யோக மையத்தின் சிறப்பாகத் திகழ்கிறது. தியானலிங்கம் என்பது ஒரு தனித்துவமிக்க சக்தி வாய்ந்த வடிவம். இதன் சக்தி எல்லைக்குள் வருபவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த உயிரை முழுமையாக உணர்வதற்கான வாய்ப்பை, தியானலிங்கம் வழங்குகிறது. ஒரு வழியில், தியானலிங்கம் என்பது முக்தியை நோக்கி அழைத்துச் செல்லும் குரு எனக் கூறலாம். தூண்களே இல்லாத, 2,50,000 செங்கற்களால் ஆன, குவிந்த கூரையுடன் கூடிய ஒரு கட்டமைப்பில் தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆழ்ந்த தியானத்தன்மையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தியானலிங்கம் ஒருவரின் ஆன்மீகத் தேடலை தூண்டி விடும் சக்தி வாய்ந்தது.
தியானலிங்க வளாகத்தின் வெளிப்பிரகாரத்தில் தீர்த்தகுண்டங்கள் அமைந்துள்ளன. சக்தி வாய்ந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ரசலிங்கங்களைக் கொண்ட தீர்த்தகுண்டம், தியானலிங்கத்திற்குள் நுழைவதற்கு முன் உங்களைத் தயார்படுத்தும் ஒரு சாதனமாகத் திகழ்கிறது. இந்த தீர்த்தகுண்டங்களில் மூழ்கி எழுவது உங்கள் உடல் நலனையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தியானலிங்கத்தின் சக்தியை உள்வாங்கிக் கொள்ளவும் உதவுகிறது.
சத்குரு நடத்தும் பயிற்சிகள், மற்ற பெரிய நிகழ்ச்சிகளை நடத்தவென்று இரு பெரிய அரங்கங்களாக a href="http://isha.sadhguru.org/mystic/adiyogi-alayam/" title="Adiyogi Alayam">ஆதியோகி ஆலயமும், ஸ்பந்தா மண்டபமும் இந்த ஆசிரமத்தில் இருக்கின்றன. 82000 சதுர அடி கொண்ட ஆதியோகி ஆலயம், தூண்கள் இல்லாத, ஈடில்லாத, தனித்துவமான கட்டிட அமைப்பும் பொருந்திய மண்டபம். இதில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அமர முடியும். தனித்தன்மை வாய்ந்த, 64000 சதுர அடி கொண்ட ஸ்பந்தா மண்டபமானது, தியான மண்டபமாகவும், ஈஷா யோக மையத்தின் மேல்நிலை யோகப் பயிற்சிகள் நடக்கக் கூடிய ஒரு அரங்கமாகவும் உள்ளது. .
மேலும் ஆசிரமத்தில், ஈஷா புத்துணர்ச்சி மையமும் ஈஷா ஹோம் ஸ்கூலும் இருக்கிறது. ஈஷா புத்துணர்ச்சி மையம் மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் உணர உருவாக்கப்பட்ட்து. இந்த மையத்தில், சத்குருவின் வழிகாட்டலில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், உடலில் புத்துணர்ச்சியையும் உயிர் சக்தியில் சமநிலையையும் வழங்குகிறது. இதனால் நீடித்த, நாள்பட்ட வியாதிகள் நீங்கி, ஆரோக்கியமாக வாழ முடிகிறது. விஞ்ஞான முறையில் வகுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிகள், அலோபதி, ஆயுர்வேதா, சித்த மருத்துவ முறைகளையும், தொன்மையான இந்திய விஞ்ஞானம் மற்றும் ஆன்மீக முறைகளையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளன.
ஈஷா ஹோம் ஸ்கூல் என்பது தங்கும் வசதியுடன் கூடிய ஒரு பள்ளி. வீடு போன்ற சூழ்நிலையில் நல்ல தரமான கல்வியை வழங்குவதே இப்பள்ளியின் நோக்கம். கல்வித் திட்டத்தில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து வழங்குவதே குறிக்கோள். வழக்கமான பாடங்களைத் தவிர, பிற அம்சங்களான கலை, பாட்டு, நடனம் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து வழங்குவதற்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மனனம் செய்வது மட்டுமே கல்வி இல்லை, வாழ்க்கைத் திறனையும் ஊட்டி வளர்ப்பதே ஒரு குழந்தையின் முழு வளர்ச்சிக்கு உதவும் என்பதைப் புரிந்துகொண்ட, சர்வதேசத் தரம் வாய்ந்த ஆசிரியர்களே இங்கு பணியாற்றுகின்றனர்.