loader
தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மாவும், தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தின் ஆதாரமுமான தமிழக கோவில்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனி, கோவில் நிலங்களையும் வருவாயையும் கையகப்படுத்த 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொடூரமான கொள்கையை அமல்படுத்தியது.

சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் ஆன பிறகும், கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே கொள்கை, இன்றும் வழக்கில் உள்ளது.

சக்திவாய்ந்த விதத்தில் சக்தியூட்டப்பட்ட கோவில்கள், தன் உயிரோட்டத்தை இழந்து சிதைந்துவருவது, கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் சமூகங்களுக்கும் சொல்லமுடியாத வலியையும் வேதனையையும் தருகிறது.
#கோவில்அடிமைநிறுத்து
OR
மிஸ்டுகால் கொடுத்து ஆதரியுங்கள்
83000 83000
தமிழக கோவில்கள் சிதைந்து வருகின்றன
1200
புனிதமான கோவில் சிலைகள்,
கடந்த 25 ஆண்டுகளில் களவுபோயுள்ளன
11,999
கோவில்கள், ஒரு காலப்பூஜை கூட
நடைபெறாமல் முடங்கிக் கிடக்கிறது
34,000
கோயில்கள், ரூ.10,000க்கும் குறைவான
ஆண்டு வருவாயுடன் போராடிக்கொண்டு இருக்கின்றன
37,000 கோவில்களில், பூஜை, பராமரிப்பு,
பாதுகாப்பு பணிகளை செய்ய
ஒருவர் மட்டுமே இருக்கிறார்
74 ஆண்டு சுதந்திரத்திற்கு பின்பும்,
கோவில்களை அடிமைப்படுத்தும் கிழக்கிந்திய கம்பெனியின்
வழக்கம் தொடர்கிறது
தமிழக கோவில்களை நாம் ஏன் விடுவிக்க வேண்டும்
கோவில்கள் சிதைக்கப்படும் நெஞ்சை முறிக்கும் கதைகள்
முகவரி தெரியாத சிறு கோவில்கள் மட்டும் சிதையவில்லை என்பதே நம்பமுடியாத உண்மை. மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துபோகும் பிரபலமான பெரிய கோவில்களும்கூட கொள்ளை அடிக்கப்பட்டு கவனிப்பாறற்று அழிந்து கொண்டிருக்கிறது.
கபாலீசுவரர் கோவில்:

பார்வதி தேவியின் புனிதமான தெய்வச்சிலை ஒன்று திருடப்பட்டு போலிச் சிலை வைக்கப்பட்டது. அறநிலையத்துறை நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில், தெய்வச்சிலையை அடையாளம் காணும் ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. களவுபோயி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மூத்த அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க>
காஞ்சி ஏகாம்பரேசுவரர்:

சோமஸ்கந்தரின் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வச்சிலையில், மேலிருந்து 8.7 கிலோ தங்கம் திருடப்பட்டது. அதற்காக மூத்த அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க>
மதுரை மீனாட்சி:

400 ஆண்டுகள் பழமையான மண்டபம் ஒன்று, கவனிப்பின்மையால் ஏற்பட்ட தீவிபத்திற்கு இரையானது. தீவிபத்திற்கு முன்பே அம்மண்டபம் மிக மோசமான நிலையில் இருந்தது. 46 தூண்களில், 15 தூண்கள் விரிசல் அடைந்திருந்தது, சில இடங்களில் கற்கூரை இடிந்திருந்தது.

இக்கோவிலில் சேதமடைந்துள்ளது இந்த ஒரு மண்டபம் மட்டுமல்ல. தெற்கிலும் கிழக்கிலும் மண்டபங்கள் இடித்து மீண்டும் கட்டப்பட்டுள்ளன என்று யுனெஸ்கோ குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, "பழைய கற்கள் அதன் வாழ்நாள் முடியும்வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஆகம சாஸ்திர விதிகளுக்கு எதிரானது."

மேலும் வாசிக்க>
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்:

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நகைகள் கணக்கிடப்பட்டு சரிபார்க்கப்படவில்லை. பெரிய கோவில்களின் நகைகளை ஆண்டுதோறும் சரிபார்த்து நகைகள் பற்றிய விபரங்களின் பதிவேடுகளை பராமரிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகுதான், கோவில் நகைகள் கணக்கிடப்பட்டன.

கோவிலில், 1.4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் எடை குறைந்துள்ளது என்று கண்டறியப்பட்டது. கோவில் தலைமை நிர்வாகி, இந்த எடைகுறைவு சாதாரண "தேய்மானத்தால்" என்று கூறினார். நாற்பதாண்டுகளாக கோவில் நகைகள் சரிபார்க்கப்படாமல் இருப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியை வெளிப்படுத்திய போதுதான், கணக்காய்வு செய்பவரின் பதவி அவ்வளவு ஆண்டுகளாக காலியாக இருந்துள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க>
4/10
அதிகம் பதிவேற்றவும்
தமிழக கோவில்களை நாம் ஏன் விடுவிக்க வேண்டும்
சத்குருவுடன் கார்த்திகை செல்வன் சிறப்பு நேர்காணல் | Puthiya Thalaimurai | Sadhguru Tamil
அழிக்கப்படும் தமிழனின் வரலாறு. அழிப்பது யார்? | Who Is Destroying Tamil Culture? | Sadhguru Tamil
சத்குருவுடன் ரங்கராஜ் பாண்டே - சிறப்பு நேர்காணல் | Chanakyaa Interview | Sadhguru Tamil
சத்குருவுடன் நியூஸ் 7 செம்மல் நேர்காணல் | News 7 | #FreeTNTemples | Sadhguru Tamil
4/29
அதிகம் பதிவேற்றவும்
இதனை ஆதரிக்கும் பிரபலங்கள்
தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஒரு கோரிக்கை
திரு. எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு கோரிக்கை
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கோரிக்கை
Tell your family & friends to show their support with a missed call
இந்து சமயம் & அறநிலையத்துறை சட்டம்: ஆங்கிலேய ஆட்சியின்போது தோன்றிய சரித்திரம்
கிழக்கிந்திய கம்பெனி, மெட்ராஸ் ரெகுலேஷன் 7 சட்டத்தை அறிமுகப்படுத்தி கோவில்களின் நிலத்தையும் பக்தர்கள் வழங்கிய செல்வத்தையும் கைப்பற்ற, அவற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
அனைத்து மதங்களைச் சேர்ந்த அமைப்புகளையும் ஆங்கிலேய அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, மெட்ராஸ் சமய மற்றும் அறநிலையங்கள் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இச்சட்டம் இந்து சமய & அறநிலையத்துறை சட்டமாக திருத்தப்பட்டு, இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் பொருத்தமானது என்று மாற்றியமைக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவிலும் அரசு கட்டுப்பாட்டில் தொடர்ந்தது
இந்து சமய & அறநிலையங்கள் சட்டத்தின்படி, கோவில்களையும் அதன் நிதியையும் அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இச்சட்டத்தின் பல்வேறு அம்சங்களை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் ஏற்க மறுத்தது.
நீதிமன்றங்களின் எதிர்ப்புகளையும் மீறி, தமிழ்நாடு இந்து சமய & அறநிலையங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இன்று 38,000 திற்கும் மேலான கோவில்கள், மடங்கள் மற்றும் இதர அமைப்புகள், தமிழ்நாடு சமய & அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
பிரம்மாண்டமான நமது தமிழ் கோவில்களும் கலாச்சாரமும்
கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல. அவை, ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ் கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்திற்கும் நமக்குமான தொடர்பு.
தொடர்பில் இருங்கள்
இந்த இயக்கத்தோடு தொடர்பில் இருக்க விரும்புகிறீர்களா?
பதிவு
ஸ்பாம் இருக்காது. எந்நேரத்திலும் சப்ஸ்கிரிப்ஷனை நீக்கி கொள்ளலாம்.
பக்தர்கள் என்ன சொல்கிறார்கள்
ஊடகங்கள் என்ன சொல்கின்றன
கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்க! ஈபிஎஸ், ஸ்டாலினுக்கு சத்க...
தமிழக கோவில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டத்தை தங்களது கட்சியின் தேர்தல் அறிக்...
Continue
இந்த திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்... முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்
கோவில்கள் பக்தர்களின் பராமரிப்பின் கீழ் இருந்தால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், அவற்றை உயிரோட்டமாய், அதிர்வலையோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல், சுயசார்புடையதாகவும் அவர்கள் ஆக்கியிருப்பார்கள்.
Continue
கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்: முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்
கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க சொல்லி, குரல்கள் ஒலித்து கொண்டிருக்கின்றன...
Continue
கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்க! ஈபிஎஸ், ஸ்டாலினுக்கு சத்க...
தமிழக கோவில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டத்தை தங்களது கட்சியின் தேர்தல் அறிக்...
Continue
இந்த திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்... முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்
கோவில்கள் பக்தர்களின் பராமரிப்பின் கீழ் இருந்தால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், அவற்றை உயிரோட்டமாய், அதிர்வலையோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல், சுயசார்புடையதாகவும் அவர்கள் ஆக்கியிருப்பார்கள்.
Continue
பிரெஸ் கிட் விபரங்களை பதிவிறக்க
ஊடகங்கள் இங்கே பதிவிறக்கம் செய்யலாம் விழிப்புணர்வு களஞ்சியம் Download Placards