“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 19
“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 19
சபர்மதி நதிக்கரையில் மிக வெற்றிகரமாக அமைந்த பேரணியை முடித்துக்கொண்டு, இன்று மத்தியபிரதேசத்தின் இந்தூருக்கு கிளம்புகிறோம். குஜராத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை, உத்தராயண் பண்டிகை. சித்திரை மாதத்தில் மகர சங்கராந்தி அன்று பட்டம் விடும் விழா இது. இன்று குழந்தைகளோடு சேர்ந்து சத்குருவும் பட்டம் விடுகிறார்…
முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.
47 ஆண்டுகள் கழித்து பட்டமும், கையுமாக… சத்குரு!
பட்டம் விடும் வீடியோ:
வழி தெரியாமல் தொலைந்தபோது…
அப்போதும் விடுவதில்லை… வழி கேட்கும் அதே சமயம், சில மிஸ்டு-காலும் கிடைக்கப் பெற்றோம் :)
டீ கடையிலும் நம் பணி தொடர்கிறது. வீடியோ:
என் பெயர் ரமேஷ்பாய். இந்த ஊர் பத்வாடா. என் கடைக்குப் பொருள் வாங்க வருபவர்களை இந்த எண்ணிற்கு மிஸ்டு-கால் கொடுக்கச் சொல்கிறேன்.
தாஹோத், குஜராத்
வழியில் காத்திருந்து ஆதரவு தெரிவிக்கும் நிறுவனம்
இப்பேரணி இந்திய மக்கள் அனைவருக்கும்!
மத்திய பிரதேசத்தில் நுழைகிறோம்
ஜாபுவா எனும் கிராம நகராட்சியில் வரவேற்பு
சத்குருவை வரவேற்க வழியில் காத்திருக்கும் மக்கள்.
Subscribe
பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க காத்திருக்கும் பள்ளி மாணவர்கள்
வழியில் பசுமையான நிலப்பரப்பு
சத்குரு ஓட்டும் பச்சை-நீல நிற மெர்சிடிஸ் காரின் உமிழ்வு சுற்றுச்சூழல் பாதிப்பை உண்டாக்குகிறதா?
2 நாட்கள் முன்பு சத்குரு அளித்த பதில்
கேள்வி: நீங்கள் ஓட்டும் கார் நிறைய தீங்கு விளைவிக்கும் வாயுவை உமிழ்கிறது என்று சொல்லப் படுகிறதே?
சத்குரு:
- நான் ஓட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 சட்டத்திற்கு உட்பட்டதா? இந்த “ஜி” வண்டி வகையை மெர்சிடிஸ் நிறுவனம் வெளிப்படையாக விளம்பரப்படுத்தி, அதை இந்திய அரசாங்கம் அங்கீகரித்தும் உள்ளது. இதன் உமிழ்வு EURO 5 தரத்தில் (அ) மிக உயர்ந்த தரத்தில் உள்ளது.
- முதலில் இப்பயணம் 7000 கி.மீ என்று நினைத்தோம். ஆனால் 40% பயணத்தில் 4700 கிமீ ஆகிவிட்டது. அப்படியெனில் இப்பயணம் எளிதாக 9000 கிமீ-ஐ தாண்டிவிடும். அதாவது 30 நாளில் 9000 கிமீ பயணிக்கவேண்டும்
- இதில் ஒவ்வொரு நாளும் 10-12 நேர்காணல் (அ) மீட்டிங் நடக்கிறது. செல்லும் வழியில் மக்கள் கூடும் இடத்தில் ஆங்காங்கே வேறு சிறு கூட்டங்கள் நடக்கிறது
- என் செயல் அளவு இவ்வளவு அதிகமாக உள்ளது. இதையெல்லாம் அவர்களில் யாரேனும் ஒருவரை வந்து செய்யச் சொல்லுங்கள். என் வயதில் பாதி வயது உள்ளவர்களை செய்யச் சொல்லுங்களேன் பார்க்கலாம்
- இது தீர்வில் பிரச்சினை கண்டுபிடிக்கும் முனைப்பாக இருக்கிறது
- பகலெல்லாம் பற்பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, இரவிலே பயணிக்கிறோம். எனக்கு வயதுவேறு ஆகிவிட்டது. என் பாதுகாப்பிற்கும் சிறிதளவு சௌகரியத்திற்கும் இது தேவை. இந்திய சாலைகளில் இரவில் இவ்வளவு தூரம் பயணிப்பது எவ்வளவு அபாயம் என்று தெரியுமா?
- இதுபோன்ற ஒரு பயணத்திற்கு எப்படிப்பட்ட வாகனம் தேவையோ அதையே நான் பயன்படுத்துகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக இது சட்டத்திற்கு உட்பட்டது.
- நீங்கள் சுயமாக ஏதோ சட்டத்தை வைத்துக்கொண்டு, அதன்படி என்னை குற்றவாளியாக்க நினைப்பது சட்டத்திற்கு புறம்பான தான்தோன்றி செயல். இது வேண்டாம். நம் நாட்டை சட்டங்களைக் கடைபிடிக்கும் நாடாக மாற்றுவோம் வாருங்கள்
- உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் அது ஒரு பொருட்டே அல்ல. நீங்கள் என்னை கல்யாணம் செய்யத் தேவையில்லை. என்னை உங்கள் குருவாக ஏற்கவும் தேவையில்லை. இது எதுவும் வேண்டாம். மிஸ்டு-கால் மட்டும் கொடுங்கள், போதும்
- இது இந்த நாட்டின், நம் குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. எங்கேயோ உங்கள் மனதின் ஆழத்தில், உங்களுக்கும் இதுதான் வேண்டும். அதனால் மிஸ்டு-கால் கொடுங்கள். என்னை பற்றி இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் இந்நாட்டில் மிஸ்டு-கால்ஸ் நடக்கவேண்டும்
கேள்வி: இந்தப் பயணத்தில் 28000 கிலோ டன் அளவிற்கு தீய வாயு உமிழப்படும் என்று சொல்லப்படுகிறதே. நீங்கள் செய்யும் செயல் மகத்தானது என்பதால் இதை புறக்கணிக்க வேண்டுமா?
சத்குரு:
- முதலில் அவர்கள் செய்துள்ள கணக்கு தவறு. இப்பயணத்தால் வெளிவரும் புகையை சரிசெய்ய 8 லட்சம் மரங்கள் அல்ல, 2500 மரங்கள் நட்டிருந்தால் போதும்.
- நாங்கள் ஏற்கெனவே 3.2 கோடி மரங்கள் நட்டுவிட்டோம். இன்னும் சில மாநிலங்களுடன் 50 கோடி, 25 கோடி மரங்கள் நட உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம். தமிழ்நாட்டில் எவ்வளவு வேண்டுமானாலும் மரம் நடுங்கள் என்று முதல்வர் கூறியுள்ளார்.
- எப்படியும் இது “டெஸ்ட்” வாகனம். இதை நான் ஓட்டவில்லை என்றாலும், இது நிச்சயம் “டெஸ்ட்-டிரைவ்”க்கு ஆட்படுத்தப்படும்
- இப்பயணத்தில் நாங்கள் உபயோகிக்கும் கார்கள் (எனது மற்றும் மஹிந்திரா வாகனங்கள்) எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டவை. அதோடு அவற்றை இந்த 30 நாள் உபயோகத்திற்கு எங்களுக்கு கடனாக வழங்கியிருக்கிறார்கள்
- சுற்றுச்சூழல் சட்டங்கள் தீட்டப்படும் போது, அது அவர்களை பாதிக்கும் என்பது தெரிந்தாலும், இவர்கள் இதுபோன்ற ஒரு பயணத்திற்கு பண உதவி செய்ய முவந்துள்ளார்கள்
- முன்னெப்போதும் இதுபோல் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட இயக்கங்களுக்கு இவர்கள் பண உதவி செய்ததில்லை. அது அவர்களை பாதிக்கும் என்பதால்
- ஆனால் இப்போது அவர்கள் இதைச் செய்ய முன்வந்திருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அம்ஜேரா அருகே காத்திருக்கும் மக்கள்
அம்ஜேராவில் பள்ளி மாணவர்களை சத்குரு சந்திக்கிறார்
மானாவரில் சத்குரு மக்களை சந்திக்கிறார்
வன்யா இயற்கை வேளான் பண்ணை
நர்மதா நதிக்கரையில் மிக அற்புதமாக, பிரம்மாண்டமாக, நாம் அதிசயிக்கும் விதமாக இருக்கிறது இந்த வன்யா இயற்கை வேளாண் பண்ணை. இயற்கைக்கு குறுக்கே நிற்காமல் நாம் விலகி நின்றால், அது எத்தனைப் பிரமாதமாக தன்னைத் தானே புத்துயிரூட்டிக் கொள்ளும் என்பதற்கு சான்றாக ஓங்கி வளர்ந்திருக்கிறது இப்பண்ணை. 60 அடி உயர பப்பாளி மரங்கள், சாத்துக்குடியை விட பெரிதான எலுமிச்சை, அடர்த்தியான காடு… எல்லாம் இயற்கை விவசாய முறையிலே! இதைப் பதஞ்சலிஜி ஜா என்பவரும் அவரது குடும்பம் பார்த்துக் கொள்கிறார்கள். இதுபோன்றதொரு தீர்வைதான் இப்பேரணி மூலம் சத்குரு அவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்!
வீடியோ:
கடையில் கிடைக்கும் எலுமிச்சையும், இவர்கள் பண்ணையில் வளரும் எலுமிச்சையும்...
நர்மதா நதிக்கு மஹா-ஆரத்தி
மஹா ஆரத்தி நடந்த ஆகில்யா கோட்டை. நர்மதா நதி இதன் பின்னே ஓடுகிறது.
மஹா ஆரத்தி வீடியோ:
சத்சங்கம்
நர்மதா நதிக்கு மஹா-ஆரத்தி செய்தபின், அதே இடத்தில் சத்சங்கம் நடைபெற்றது. அதில் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள், போலீஸ் கமிஷனர், பொதுமக்களும் பங்கேற்றனர். நர்மதா நதியை மீட்க தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று மஹேஷ்வர் ஊரின் தலைவர்களும், பொதுமக்களும் கை உயர்த்தி உறுதிகூறுகிறார்கள்.