என் உடலும் எலும்புகளும்
புத்தம்புது சாம்பலாக மாறும் முன்,
என் உயிரின் ஆற்றலும் அழகும்
இவ்வுலகைத் தீண்டட்டும்.
என் உயிரின் நறுமணத்தை
என் சுவாசம் உங்களிடம் சேர்க்கட்டும்;
ஒன்றுமில்லாத்தன்மையின் தேவனாம் என் நாதனின்
மகிமையை உங்களுக்கு உணர்த்தட்டும்.
கவனத்தை ஈர்த்து திசைதிருப்பும்
மேலோட்டமான பொருள்தன்மைக்காக
ஒன்றுமில்லாத்தன்மையின் ஆழத்தை
ஒருபோதும் தவறவிடக்கூடாது.
இந்தக் கவனச்சிதறல்கள்
முடிவின்றி நீடிக்காமல் இருக்கட்டும்.
காலத்தைக் கடந்தவனாய்,
நான் காலத்தோடு விளையாடுகிறேன்.
இந்த விளையாட்டுக்கு பொருள் ஏதுமில்லை,
பொருட்கள் அனைத்தும் புனைவுகள்தானே!
நாம் வாழும் வாழ்க்கை
வலிமையுடன் தாக்கத்துடன் இருக்க வேண்டும்.
வாழ்ந்தபின் நாம் விட்டுச்செல்வது
வெறும் சாம்பல் மட்டும்தானே!