பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

பசுந்தளிர்

ஆற்றல் மிக்க சூரியனை
அடைத்து வைக்கும் சிறிய இலை
தன்னுயிர் காத்து
பல்லுயிர்களுக்கும் உணவு படைத்து
உயிர்ப்பு மிக்க உயிர்களால்
உலகை தழைக்கச் செய்கிறது

துச்சமாக கருதும்
பச்சைப்புல் அது
உன் உயிரின் அடிப்படை
- உணர்வாயோ நீ?

அகிலத்தில் மானுடர்க்கு
அவதிகள் பலவாகும்
அதிகரிக்கும் பசுந்தளிர்கள்
அவை ஒவ்வொன்றும் தீர்வாகும்

Share This