உயிர்த்துடிப்பு மிக்க பசும் இலை
உயிர் மற்றும் ஒளியின் சங்கமமாகும்
அது ஒளியின் சக்தியால் உயிரை உருவாக்கும்
அது இந்த பூமியில் பெரும்பாலான
உயிர்களைத் தோற்றுவித்த பிரம்மாண்டம்.
வடக்கிலிருந்து செய்தியுடன்
குளிர்ந்த காற்று வீசும்போது
இந்த பச்சை நிற அதிசயம் பழுப்பாகி
தன் கடமைகளை முடித்து
மரணத்தின் வண்ணமயமான சிறு நடனத்துடன் உதிர்கிறது
மண்ணிற்கு மேலும் கீழும் உயிருக்கு வளம் சேர்க்க
வாழ்ந்து மடியும் பசும் இலை
வெண்பனி பொழியும் குளிர்காலத்திற்கு வழிவிடும்
வெண்பனி நிலத்தை
குளிர்ந்த சுகம் மற்றும் ஓய்வின் போர்வையால் போர்த்தும்.
பசும் இலையின் அதிசயம்
உயிரின் மாயாஜாலத்தை உருவாக்குவது.
அதன் செழிப்பில்தான் உயிரும்
அதன் அனைத்து சாத்தியங்களும் உள்ளது
பசும் இலை - வாழ்வின் மலரும் கனியும் அதுவே