அறியாமையிலிருந்து அறிவுக்கான பயணம்
காலத்தால் கட்டுண்ட உடலின் வழியிலிருந்து
காலத்தை வென்ற உயிரின் வழிக்கு
செல்லும் பயணம்.
காலத்தின் இரக்கமற்ற சக்கரம் மெதுவாக,
ஆனால் உறுதியாக தன் பரிமாணத்தில்
உள்ள அனைத்தையும் நொறுக்கிவிடும்.
இந்த உடல், மனம், மற்றும் பொருள்.
இந்த சக்கரத்தின் மீது சவாரி செய்தால்
ஒரு பயணம் உண்டு, அதே சக்கரத்தால்
நொறுங்கிப்போனால் அது பேரழிவானது.
நொறுங்கினால் உயிரின் சாரம் கைசேராது.
கால சக்கரத்தின் மீது சவாரி செய்தால்
காலத்தால் ஆளப்படும் அனைத்தும்
உங்கள் காலடியில் இருக்கும்
நீங்கள் அதன்மேல் அடியெடுத்து வைத்திட,
அல்லது அவை உங்கள்மேல் குவிந்துவிடும்