பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

மஹாமந்திரம்

மஹா மந்திரத்தின்
பஞ்ச அக்ஷரங்கள்
அதன் மர்மம், மாயாஜாலம்,
பித்தம், அனைத்தும் வரவேற்கத்தக்கதே
ஏனெனில் அது ஒருவர் எதில் சிக்கி
ஊசலாடிக்கொண்டிருந்தாரோ
அதிலிருந்து விடுவித்திட முடியும்.

ஊசலாடுவதை நிறுத்தி,
ஒருவரை, ஊசலாடச் செய்வது,
நடுக்கம் கொள்ளச் செய்வது,
காலம் மற்றும் கிழிசலுக்கு ஆளாகி
மடியச் செய்வதன் விளிம்பிற்குக்
கொண்டுசெல்லக்கூடிய தீவிரத்தின்
தளத்தில் உங்களை நிறுத்தும்.

இங்குள்ள வாழ்க்கையின்
தெளிந்த காட்சியைத் தந்து இதைக்
கடந்ததன் உன்மத்தமான வல்லமையைச் சேர்க்கும்.

Share This