பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

இந்த நான்

குருவின் மடி

நானோ படைப்பில் மிகச்சிறிய தூசி

ஆனால் படைப்பு முழுவதையும்

என்னுள் ஏந்துகிறேன்

என் கவிதையில்

நானே கவிஞன்

நானே அண்டசராசரம்

நான் ஜொலிக்கிறேன், ஆனால் ஒளியில்லை

இருளுக்கு அப்பாற்பட்டிருக்கிறேன்

நான் பாதையல்ல, சேருமிடம்

நான் அமாவாசை இரவில்

பௌர்ணமியைப் போல இருக்கிறேன்

நான் வாழ்வுமில்லை மரணமுமில்லை

ஆனால் ஒருசேர இரண்டாகவும்

இரண்டையும் கடந்ததையும்

பொதித்திருக்கிறேன்

புரிந்துகொள்ளவோ, பின்பற்றவோ

மதிக்கவோ அல்லது நேசிக்கவோ

வெறுக்கவோ கூட முயற்சிக்காதீர்கள்.

வெறுமனே இதனுள் ஆழ்ந்திடுங்கள்!

மிகுந்த அன்பும் ஆசிகளும்

- சத்குரு

Share This