மண், இந்த பூமியெனும்
பொக்கிஷத்தில் அனைத்துயிர்க்கும் ஆன்மா.
மண், பிறப்பையும் இறப்பையும் உள்ளடக்கிய புதிர்.
மரணத்தை உயிர்த்தன்மையாக மாற்றும்
ஒரே மாயாஜாலப் பொருள்.
மண்ணின் மாயாஜாலம், வாழ்வில்
நாம் காணும் செல்வமனைத்திற்கும் ஆதாரம்.
அழியும் மண்வளம்
பசியாறா வயிற்றின் நெருப்பைப் பரப்பி
உலகையே எரித்து அழித்திடக்கூடும்.
இந்த மாயாஜாலத்தை
துயர்தருவதாக மாற்றாமலிருப்போம்…