பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

உண்மையிலிருந்து...

உண்மையின் தேடலில்
அபாயமான பல சூழல்களையும்
பொய்மையில் ஆழமாய் ஆழ்ந்திருக்கும்
அழிவுகரமான பல மனிதர்களையும்
அடிக்கடி எதிர்கொண்டேன்.

என் குருவின் சித்தத்தை
நன்றியோடு பக்தியோடு ஏற்று
அருளுருவை உருவாக்கும்
அயராத பணியில் இருக்கையில்
ஆதாய வேட்டையில் ஆழ்ந்திருக்கும்
பற்பல பிரிவினைவாத பாதகர்களை
சகித்துப் போக வேண்டியிருந்தது.

அறியாமை செருக்கு என்ற எதிர்காற்றில்
அடிப்படையான உயிரின் அடித்தளத்தை இழந்து
உலர்ந்த உள்ளங்களில்
உண்மையை ஊக்குவிக்கும் உட்புகுத்தும்
முயற்சியில் தற்போது இருக்கிறேன்.

உண்மையின் பயணம் என்றென்றும்
உயர்ந்து நிலைபெறட்டும்.

- சத்குரு
பகிருங்கள்