மும்பையில் சத்குருவுடன் நடக்கவிருக்கும் இன்னர் இஞ்சினியரிங் நிறைவு வகுப்பு பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும் (இது இன்னர் இஞ்சினியரிங் ஆன்லைன் உள்ளடக்கியது)

 

மும்பையில் சத்குருவுடன் நடக்கவிருக்கும் இன்னர் இஞ்சினியரிங் நிறைவு வகுப்பு பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும் (இது இன்னர் இஞ்சினியரிங் ஆன்லைன் உள்ளடக்கியது)

மேற்பார்வை
 
ஈஷா யோகா ஆன்லைன்
seperator
 
இந்த ஈஷா யோகா ஆன்லைன் உங்கள் வாழ்வை நீங்கள் விரும்பும்விதமாக அமைத்துக்கொள்ள உதவும் கருவிகளையும், தீர்வுகளையும் வழங்கும் 7-வகுப்புகள் உள்ளடக்கியது. ஒவ்வொரு வகுப்பிலும் 60-90 நிமிடங்களுக்கான வீடியோ இருக்கும். யோக அறிவியலின் சாரத்திலிருந்து உருவாக்கிய வழிமுறைகள் கொண்டு, வாழ்வின் அடிப்படையை நீங்கள் ஆராய்ந்து உணர இந்த வகுப்பு வழிசெய்யும். அதுமட்டுமல்ல உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் உங்களுக்கு ஆதாரமாக இருக்கும் உயிர்சக்தியை நிர்வகிக்கத் தேவையான பகுத்தறிவையும் இவ்வகுப்பு உங்களுக்கு வழங்கும்.
ஒவ்வொரு வகுப்பையும் 90 நிமிட உயர்-தர வீடியோவாகக் காணலாம். இதில் சத்குருவின் சொற்பொழிவும் சத்குரு வழிநடத்தும் தியானங்களும் இடம்பெறும்.
வகுப்பின் அமைப்பு
 
வகுப்பின் அமைப்பு
seperator
 
வகுப்பு 1

"இவ்வகுப்பு மூலம் என் பயணம் ஆரம்பமானது… இதுவரை நானே அறியாமல் என்னுள் புதைந்திருந்த பல திறன்கள் இப்போது கட்டவிழ்க்கத் துவங்கியுள்ளன" - சாரா ரிட்டர்

வகுப்பு 2

"என் எண்ணங்களிலும், வாழ்விலும் இழையோடிய கட்டுப்பாடுகளை கண்டறிந்து, அவற்றை அகற்றும் வழியையும் இந்த வகுப்பின் மூலம் கற்றேன். இதனால் புதியதோர் சுதந்திரத்தை உணர்கிறேன்"

- மேகன் பென்

வகுப்பு 3

"என்னை சுற்றியிருக்கும் மனிதர்ளோடும் மற்ற உயிர்களோடும் விழிப்புணர்வோடு ஒரு ஆழமான தொடர்பையும் ஈடுபாட்டையும் என்னால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது"

- ரயன் ஜாகப்சன்

வகுப்பு 4

"நான் இதுவரை என்னையும் இவ்வுலகையும் எப்படிப் பார்த்து வந்தேனோ, அந்த கண்ணோட்டத்தை இது முற்றிலுமாக மாற்றியது. இப்படைப்பை நிறைத்திருக்கும் ஒருமையின் ஆனந்தத்தை நான் உணர ஆரம்பித்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் எதிர்மறை உணர்வுகள் எல்லாம் என்னுள் இருந்துதான் வருகிறது, வெளி சூழ்நிலைகளால் அல்ல என்பதை உணரும்போது, என்னை அழுத்திய அந்த எதிர்மறை உணர்வுகள் மறையத் துவங்கியது"

- ஜிம் குலோவிஸ்

வகுப்பு 5

"என் மனதை மிக ஆழமாகவும், கூர்மையாகவும் உணர்ந்தறிய இவ்வகுப்பு உதவியாக இருந்தது. எந்த எண்ணங்களாலும் உணர்வுகளாலும் என் வாழ்வை துன்பமயமாக மாற்றிக் கொண்டிருந்தேனோ, அதே எண்ணங்களும், உணர்வுகளும் என் வாழ்வை ஆனந்தமயமாக மாற்றவல்ல அதிசயமான கருவிகளாகவும் செயல்படும் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்"

- மைக்கேல்

வகுப்பு 6

"இப்பிரபஞ்சத்திற்கே அடிப்படையான சப்தத்தோடு ஒன்றியைந்து நான் இதுவரை அறிந்திடாத மிக மிக ஆழமான அமைதியில் ஆழ்ந்தேன்"

- ஆன் கூலி

வகுப்பு 7

"ஒரு அமைதியான ஆனந்தமான மனிதனாய் வாழ்வதற்கான திறனை இங்கு எனக்கு வழங்கினார்கள். இவ்வுலகம் 'என் உலகம்' என்பதை இப்போது நான் உண்மையாகவே உணர்கிறேன்"

- ராஜ் மோகன்

ஆராய்ச்சி முடிவுகள்
 
ஆராய்ச்சி முடிவுகள்
seperator
 
ஈஷா யோகா வகுப்பு பங்கேற்பாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கவனிக்கப்பட்டவை
%%
92%
பேரிடம் உணர்வளவில் சமநிலை அதிகரிப்பு
%%
94%
பேரிடம் ஆழமான உள்நிலை அமைதி உருவாக்கம்
%%
98%
பேருக்கு சிந்தனைத் தெளிவு அதிகரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்க
 
எங்களைத் தொடர்பு கொள்க
seperator
 
ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பிற்கோ, ஈஷா யோகா நிறைவு வகுப்பிற்கோ (ஷாம்பவி மஹாமுத்ரா) பதிவு செய்வதில் கேள்விகள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

உதவி மையம்:

இந்தியா: +91-890-381-5678

 

பொதுவான கேள்விகள்

indiasupport@innerengineering.com

ஈஷா யோகா வகுப்பு (தேர்ச்சி பெற்ற ஈஷா ஆசிரியர் வழிநடத்தும் 4-நாள் / 7-நாள் வகுப்புகள்): உங்களுக்கு அருகில் நடைபெறும் வகுப்புகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
 
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
seperator
 

நேரடியாக நடக்கும் வகுப்பில் கலந்துகொள்ளும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக, வகுப்பின் வீடியோவை ரீ-வைண்ட் / ஃபாஸ்ட்-ஃபார்வர்டு செய்து பார்த்தல் அல்லது மீண்டும் முதலில் இருந்து பார்க்கும் வசதி ஆகியவை வழங்கப்படவில்லை. இருப்பினும் 30 வினாடிகள் வரை முன்னே சென்று தற்சமயம் தவறவிட்டதை மட்டும் மீண்டும் கேட்கமுடியும். ஒரு வகுப்பு முடிந்தவுடன் நேராக அடுத்த வகுப்பிற்கு வழிநடத்தப்படுவீர்கள். அதனால் ஒவ்வொரு வகுப்பையும் முழு கவனத்துடன் பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கி அதில் ஈடுபடுங்கள். அந்நேரத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாமல், அதற்குத் தேவையான நேரத்தை முழுமையாக ஒதுக்குவது அத்தியாவசியம்.

ஒரே அமர்வில் 7 வகுப்புகளையும் அடுத்தடுத்து நிறைவு செய்யவேண்டும் என்றில்லை. ஆனால் அதே சமயத்தில் வகுப்புகளுக்கு இடையில் அதிகமாக இடைவெளி விடுவதும் உகந்ததல்ல. உங்கள் அன்றாட வேலையைப் பொறுத்து உங்கள் நேரத்தை நிர்வகித்துக் கொள்ளுங்கள் ஆனால் பதிவுசெய்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் இவ்வகுப்பை முடித்துவிடுங்கள்.

இவ்வகுப்பிற்கு பதிவு செய்தாலே, அது இவ்வகுப்பை முழுமையாக செய்து முடிக்க நீங்கள் கொடுக்கும் உத்திரவாதம் என்றே நாங்கள் கருதுகிறோம். இவ்வகுப்பு வெறும் வீடியோக்களின் தொகுப்பல்ல. இது ஒரு முழுமையான செயல்முறை. இதை முழுமையாக செய்துமுடித்தால்தான், இது எந்தெந்த வகைகளில் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை நீங்கள் உணரமுடியும். உங்கள் வாழ்வையே மாற்றவல்ல இக்கருவிகளை பயன்படுத்தி உங்கள் வாழ்வில் மாற்றம் கொண்டுவரும் பொருட்டு சொல்கிறோம்: தயவுசெய்து இவ்வகுப்பை எப்படியேனும் செய்துமுடிக்கப் பாருங்கள். பதிவை ரத்து செய்தால் அதற்கான தொகையை திரும்பப் பெறவது சாத்தியமில்லை.

யூ-டியூப் வீடியோக்கள் பல்வேறு தலைப்புகளைப் பற்றிய ஆழமான விளக்கங்களை வழங்கினாலும் அது ஒரு வகுப்போ செயல்முறையோ அல்ல. ஆனால் சத்குரு வடிவமைத்திருக்கும் ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு "நீங்கள் விரும்பும் வாழ்வை" உருவாக்க உதவும் கருவிகளையும் யுக்திகளையும் உங்களுக்கு வழங்கும். யோக அறிவியலின் சாரத்தை அடிப்படையாக கொண்ட வழிமுறைகளைப் பின்பற்றி, வாழ்வின் அடிப்படைகளை நீங்கள் ஆராய்ந்து உணரும் வாய்ப்பை இவ்வகுப்பு வழங்குகிறது. அதுமட்டுமல்ல உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் உங்களுக்கு ஆதாரமாக இருக்கும் உயிர்சக்தியையும் நிர்வகிக்கத் தேவையான பகுத்தறிவையும் இவ்வகுப்பு உங்களுக்கு வழங்கும்.

  • குறைந்தபட்சம் 512kbps வேகத்தில் வீடியோவை டவுன்லோடு செய்யும் திறனுள்ள ப்ராட்பேண்ட் இணைப்பு தேவைப்படும் (அது DSL, கேபிள் அல்லது சாட்டிலைட் இணைப்பாக இருக்கலாம்). உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை bandwidthplace.com எனும் இணையத்தில் மதிப்பிடலாம்.
  • தேவையான ஆப்பரேட்டிங் சிஸ்டம்: Windows 7, 8 அல்லது Mac OS X வெர்ஷன் 10.1.5 அல்லது அதற்கும் மேலான வெர்ஷன படன்படுத்தலாம்.
  • பிரௌசர் : Google Chrome (இதற்கு சிறந்தது), அல்லது Internet Explorer, Firefox, Safari பயன்படுத்தலாம்.
  • அடோப் ஃப்லாஷ் ப்ளேயர் வெர்ஷன் 9.0.115 அல்லது அதைவிடவும் சமீபத்திய பதிவை பதிவிறக்கம் செய்யவும்.
  • இவ்வகுப்பிற்குத் தேவையான அனைத்து மென்பொருள் பாகங்களும் கூகுள் க்ரோம் பிரௌவுசரில் இருப்பதால், இவ்வகுப்பைக் கூகுள் க்ரோம் பிரௌவுசரில் காண பரிந்துரை செய்யப்படுகிறது.

வீடியோ பார்க்கும் அனுபவம் சிறப்பாக அமைய, சமீபத்திய அடோப் ஃப்லாஷ் மென்பொருளை பதிவிறக்கம் செய்யுங்கள்: http://www.adobe.com/go/getflashplayer

வயர்/வயர்லெஸ் என இரண்டு விதமான இன்டர்நெட் வசதியிலும் இவ்வகுப்பைக் காண முடியும். இருப்பினும் உயர் தரத்தில் வீடியோவை காண வயர் மூலம் இன்டர்நெட் வசதி பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

Testimonials