ஜனநாயகத்திற்கு குரல் கொடுங்கள்
இந்த ஸ்பாட் வீடியோவில், இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் ஜனநாயக செயல்முறையின் மதிப்பை, அதன் பெருமையை தாழ்த்தும் அளவிற்கு அதிகரித்துவிட்ட லஞ்சம் / ஊழல் பற்றிய அவரது ஆழமான சிந்தனைகளை சத்குரு பகிர்கிறார். "ஊழலின் பிடியில் ஜனநாயகம் சிக்கித்தவிக்கும் நிலையை நாம் அனுமதித்தால், பொது மக்களின் கைகளில் இருக்கும் அந்த மாபெரும் உரிமையை விட்டுக்கொடுக்கிறோம்" என்று சொல்கிறார். பொது மக்களாகிய நாம் ஒவ்வொருவரும், எல்லா விதமான லஞ்சம் / ஊழல்களையும் தவிர்த்து, அவை நடைபெறின் அதுபற்றிய புகார் செய்து, ஜனநாயகம் ஓங்கவும், தழைக்கவும் வழிசெய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்கிறார். "எந்தக் கட்சி, எந்தத் தலைவர் என்பதைத் தாண்டி, ஜனநாயக செயல்பாட்டில் ஊழலை நுழைப்பவர் யாராக இருந்தாலும், அதை எதிர்த்து நாம் உடனடியாக செயல்பட வேண்டும்" என்கிறார். இதன் முழு பதிவை வீடியோவில் காண்க.
 
 
 
 


 


Love & Grace

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1