Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
எரிச்சல், கோபம், வெறுப்பு, சீற்றம் ஆகியவை படிப்படியாக முன்னேறும் உணர்ச்சிகளாகும். நீங்கள் லேசான எரிச்சலை உணர்ந்தாலே அதை சரிசெய்ய நீங்கள் வேலைசெய்ய வேண்டும்.
இன்னர் இன்ஜினியரிங் அல்லது ஈஷா யோகா என்பது உங்கள் உடல் மற்றும் மனம் எனும் இந்த சிக்கலான இயந்திரத்தை உங்களுக்கு எதிராக இல்லாமல் உங்களுக்காக வேலை செய்யும் விதமாக அமைத்துக்கொள்வது.
உங்கள் உடலையும் மனதையும் உணர்ச்சிகளையும் திறந்த நிலையில் வைத்திருந்தால், உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் உயிர்சக்தியைத் திறந்த நிலையில் வைத்திருந்தால், வாழ்க்கை மாயாஜாலமாகிவிடும்.
என்னை சந்தோஷமாகவோ, கவலையாகவோ, கோபமாகவோ, துயரமாகவோ ஆக்கும் வலிமையை நான் எவருக்கும் கொடுத்ததில்லை. இது நீங்கள் செய்யவேண்டிய ஒன்று: நீங்கள் இருக்கும் விதத்தை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும்.
உள்தன்மை என்று வரும்போது, உங்கள் விழிப்புணர்வு ஏதோவொன்றை நோக்கி குவிந்திருந்தால், அதை அடையவிடாமல் உங்களை தடுக்கும் சக்தி பிரபஞ்சத்தில் எதுவுமில்லை.
யோகா என்றால் சங்கமம். அதை நீங்கள் ஒழுக்கத்தின் மூலமாக உணர்கிறீர்களா அல்லது கவலையின்றி இருப்பதன் மூலமாக உணர்கிறீர்களா என்பது உங்கள் விருப்பம்.
மண் ஒரு வர்த்தகப்பொருளோ எல்லையற்ற வளமோ அல்ல. அதை நாம் அழித்தால், பூமியில் உயிர்வாழ்க்கை நின்றுவிடும். மண் காப்போம்.
உங்கள் தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வது மட்டும் போதாது; தோல்வியடையாமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எதற்கு ஆசைப்பட்டாலும், அதை நிகழச்செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கை என்பது உங்கள் கர்மா - அதாவது அது நீங்கள் உருவாக்குவது.
செயலிலும் வெளிப்பாட்டிலும் ஒவ்வொரு மனிதரும் மாறுபடலாம். ஆனால் அடிப்படையான உயிரைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மனிதரும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்.
தினமும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறையாவது நீங்கள் இன்னும் சிறப்பான மனிதராக மாறிக்கொண்டு இருக்கிறீர்களா என்று கணக்கிடுங்கள்.