மூன்று படிகளைத் தாண்டி, வெளிச் சுற்று பிரகாரத்தில் தியானலிங்கத்தை அடையும் முன்பாக பதஞ்சலி முனிவரின் சிலையை பார்க்கலாம் – யோக சூத்திரத்தின் ஆசிரியர் என்று கொண்டாடப் படுபவர். பாதி பாம்பின் உருவமும் மீதி மனிதனின் உருவமுமாக உள்ள யோகக் கலையின் தந்தையின் 11 அடி சிலை வடிவத்தை - பூமியில் கட்டு பட்டுக் கிடக்கும் மனிதத் தன்மையிலிருந்து எழும்பி தெய்வீகத்தை அடையும் தன்மை கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் தலையின் மேல் ஏழு தலை நாகத்தின் உருவம் யோகத்தின் நோக்கமான சக்திநிலை ஏழு சக்கரங்களைத்தாண்டி எழும்புவதை குறிக்கிறது. இடது பக்கம் வனஸ்ரீயின் புண்ணிய ஸ்தலம் உள்ளது – இது தியானலிங்கத்தின் பெண் தன்மை கொண்ட சிற்பம் – பதஞ்சலியின் எதிர்ப்பதம். பச்சை நிற கருங்கல்லில் செதுக்கிய வனஸ்ரீ, அரச மரத்தின் சிற்ப வடிவம். நடுவில் இருக்கும் தங்க இலை மூலாக்கினியையும், வளமையையும் குறிக்கிறது. இதன் அருகில் அமர்ந்து தியானம் செய்தால், இதன் சக்தி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் உகந்தது. பாரம்பரியமான கீர்த்தி - முகம் வனஸ்ரீ மண்டபத்தின் முகட்டில் இருக்கும்.