

மருத்துவ நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள்
கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில், நம்மை பாதுகாப்பதற்காக சுயநலமற்ற சேவையும், தியாகமும் செய்துவரும் அனைத்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எங்கள் மனம்-கனிந்த நன்றிகள். எங்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கும் வகையில், உங்கள் நல்வாழ்விற்கு உறுதுணையாய் இருக்கக்கூடிய ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பை உங்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்.






வகுப்பு மொழி | கட்டணம் | |
---|---|---|
ஆங்கிலம் | ₹3,500 | பதிவு செய்யுங்கள் |
ஹிந்தி | ₹1,500 | பதிவு செய்யுங்கள் |
தமிழ் | ₹1,500 | பதிவு செய்யுங்கள் |
கன்னடம் | ₹1,500 | பதிவு செய்யுங்கள் |
தெலுங்கு | ₹1,500 | பதிவு செய்யுங்கள் |
மராத்தி | ₹1,500 | பதிவு செய்யுங்கள் |
மலையாளம் | ₹1,500 | பதிவு செய்யுங்கள் |
ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆராய்ச்சி
ஈஷா யோகா ஆன்லைன் பங்கேற்பாளர்களிடத்தில் 50%க்கும் அதிகமாக மன அழுத்தத்தை குறைத்துள்ளதாக முடிவுகள் கிடைத்துள்ளன.
கார்ப்பரேட் வகுப்பு ஆராய்ச்சியில் பார்ட்னர் :

ரட்கர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி
சந்தோஷம், ஆற்றல், விழிப்புணர்வு மற்றும் பணி ஈடுபாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை ஈஷா யோகா ஆன்லைன் வழங்குவதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.
கார்ப்பரேட் வகுப்பு ஆராய்ச்சியில் பார்ட்னர்:

உதவி மையம்:
இந்தியா: +022-4897-2450
பொதுவான கேள்விகள்
indiasupport@innerengineering.com
ஈஷா யோகா வகுப்பு (தேர்ச்சி பெற்ற ஈஷா ஆசிரியர் வழிநடத்தும் 4-நாள் / 7-நாள் வகுப்புகள்): உங்களுக்கு அருகில் நடைபெறும் வகுப்புகள்
ஈஷா யோகா ஆன்லைன் என்பது சத்குரு வழிநடத்தும் வகுப்பு. இதில் மொத்தம் 7 வகுப்புகள் (பாகங்கள்) உள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் 90 நிமிடங்களுக்கான வீடியோ இருக்கும். அதைத்தொடர்ந்து சத்குரு வழிகாட்டும் ஒரு தியானம் உங்களுக்கு வழங்கப்படும். மேலும், வகுப்பின் கருவிகளை உங்கள் அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதற்கு உதவும் விதமாக விழிப்புணர்வுப் பயிற்சிகள் (Awareness Exercise) ஒவ்வொரு வகுப்பின் இறுதியிலும் வழங்கப்படும். இவ்வகுப்பு படிப்படியாக உள்வாங்கும் செயல்முறை என்பதால், ஒரு பாகத்தைத் தவிர்த்து மற்றொன்றிற்கு நீங்கள் செல்லமுடியாது. அதோடு ஒவ்வொரு வகுப்பையும் நீங்கள் முழுமையாகக் காண வேண்டும்.
நேரடியாக நடக்கும் வகுப்பில் கலந்துகொள்ளும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக, வகுப்பின் வீடியோவை ரீ-வைண்ட் / ஃபாஸ்ட்-ஃபார்வர்டு செய்து பார்த்தல் அல்லது மீண்டும் முதலில் இருந்து பார்க்கும் வசதி ஆகியவை வழங்கப்படவில்லை. இருப்பினும் 10 வினாடிகள் மட்டும் முன்னே சென்று தற்சமயம் தவறவிட்டதை மீண்டும் கேட்கமுடியும். ஒரு அமர்வு முடிந்தவுடன் நேராக அடுத்த அமர்விற்கு வழிநடத்தப்படுவீர்கள். அதனால் ஒவ்வொரு அமர்விலும் எவ்வித தடங்கலும் இன்றி அதில் முழு கவனத்துடன் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நேரத்தை முழுமையாக ஒதுக்குவது அத்தியாவசியம்.
வகுப்பிற்குப் பதிவு செய்த நாளிலிருந்து வகுப்பை நிறைவு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
ஒரே அமர்வில் 7 பாகங்களையும் அடுத்தடுத்து நிறைவு செய்யவேண்டும் என்றில்லை. ஆனால் அதே சமயத்தில் இரு அமர்வுகளுக்கு இடையில் அதிகமாக இடைவெளி விடுவதும் உகந்ததல்ல. ஏனெனில் கோர்வையான தொகுப்பாய் இருக்கும் வகுப்பு அனுபவம் தடைபட்டுப் போகும். உங்கள் அன்றாட வேலையைப் பொறுத்து உங்கள் நேரத்தை நிர்வகித்துக் கொள்ளுங்கள். ஆனால் பதிவுசெய்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் இவ்வகுப்பை முடித்துவிடுங்கள்.
இதுவரை சத்குரு ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். இவ்வகுப்பின் போனஸ் வீடியோ பகுதியில், "பொக்கிஷ வீடியோ"க்களாக இந்த விலைமதிப்பற்ற கேள்வி-பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் (அந்த அமர்வை முடித்தபின் மட்டுமே) அந்த அமர்வு தொடர்பான கேள்வி-பதில்களை நீங்கள் காணமுடியும்.
சத்குருவின் யூ-டியூப் வீடியோக்கள், வாழ்வின் பல்வேறு அம்சங்களை நாம் வியந்து போகும் விதத்தில் ஆழமாக விளக்குகிறது. ஆனால் சத்குரு வடிவமைத்திருக்கும் இன்னர் இன்ஜினியரிங் ஆன்லைன் வகுப்பு, உங்களுக்குள் ஆழமான மாற்றத்தை நிகழச் செய்யும் திறன்கொண்ட படிப்படியான செயல்முறை. "நீங்கள் விரும்பும் வாழ்வை" உருவாக்க உதவும் கருவிகளையும் யுக்திகளையும் இவ்வகுப்பு உங்களுக்கு வழங்கும். யூ-டியூப் வீடியோக்கள் இவ்வகுப்பிற்கு கூடுதல் மெருகேற்றலாம், ஆனால் அவை இவ்வகுப்பிற்கு மாற்றீடாக இருக்க முடியாது.
இந்த ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு தற்சமயம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் ருஷிய மொழிகளில் வழங்கப்படுகிறது. மேலும் இவ்வகுப்பை சைனீஸ், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வழங்கவும் மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா கற்றுக்கொண்டு உங்கள் வாழ்வை மாற்றவல்ல இந்த யோகப் பயிற்சியை அன்றாடம் செய்ய விரும்பினால், ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பை முடித்தபிறகு, ஈஷா யோகா நிறைவு வகுப்பில் நீங்கள் பங்கேற்கலாம்.
வகுப்பின் ஒவ்வொரு அமர்விலும் இதுவரை அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்கள், கேள்வி-பதில் வீடியோ தொகுப்புகளாக, "பொக்கிஷ வீடியோ"வில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு அமர்வை முடித்தால் மட்டுமே அது சம்பந்தமான பொக்கிஷ வீடியோக்களை நீங்கள் காணமுடியும். உதாரணத்திற்கு, இரண்டாவது அமர்வை முடித்தால் மட்டுமே இரண்டாவது அமர்விற்கான பொக்கிஷ வீடியோக்களை நீங்கள் காணமுடியும். 7 அமர்வுகளையும் முடித்தபின், எந்தத் தடையும் இன்றி தொகுப்பில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.
- அனைத்து Windows அல்லது Mac OS கணிணிகள் மற்றும் ஒருசில வெர்ஷன் Linux கணிணிகளில் பொதுவாய் வழக்கத்தில் இருக்கும் பிரவுசர்கள் மூலம் இவ்வகுப்பை மேற்கொள்ளலாம்.
- ஆன்ட்ராய்ட் டேப்லெட் / ஆன்ட்ராய்ட் ஃபோனிலும் (குறைந்தது ஆன்ட்ராய்ட் வெர்ஷன் 4.2 ) இவ்வகுப்பை மேற்கொள்ளலாம்.(சமீபத்திய சத்குரு மொபைல் ஆப்-இலும் ஆன்லைன் வகுப்பு உள்ளது)
- IOS கருவிகள். சமீபத்திய சத்குரு மொபைல் ஆப்-இலும் ஆன்லைன் வகுப்பு உள்ளது)
- இன்டர்நெட் வசதி
- குறைந்தபட்சம் 350kbps வேகத்தில் வீடியோவை டவுன்லோடு செய்யும் திறனுள்ள ப்ராட்பேண்ட் இணைப்பு தேவைப்படும் (அது DSL, கேபிள் அல்லது சாட்டிலைட் இணைப்பாக இருக்கலாம்). உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை bandwidthplace.com எனும் இணையத்தில் மதிப்பிடலாம்.
- வீடியோ பார்க்கும் உங்கள் அனுபவம் நல்லவிதமாக அமைய, வயர் மூலம் இன்டர்நெட் வசதி பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
- தேவையான ஆப்பரேட்டிங் சிஸ்டம்: Windows 7, 8 அல்லது Mac OS X வெர்ஷன் 10.1.5 அல்லது அதற்கும் மேலாக.
- பிரௌசர் : Google Chrome (இதற்கு சிறந்தது), அல்லது Internet Explorer, Firefox, Safari பயன்படுத்தலாம்.
- இவ்வகுப்பிற்குத் தேவையான அனைத்து மென்பொருள் பாகங்களும் Google Chrome பிரௌவுசரில் இருப்பதால், இவ்வகுப்பை Google Chrome பிரௌவுசரில் மேற்கொள்ள பரிந்துரைக்கிறோம்.
வயர்/வயர்லெஸ் என இரண்டு விதமான இன்டர்நெட் வசதியிலும் இவ்வகுப்பைக் காண முடியும். இருப்பினும் உயர்-ரக வீடியோ தரத்தில் காண வயர் மூலம் இன்டர்நெட் வசதி பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
வீடியோவைக் காண நீங்கள் பயன்படுத்தும் கணினியில் இன்டர்நெட் வேலை செய்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.
இன்டர்நெட் நல்ல நிலையில் வேலை செய்தும் வீடியோ துவங்கவில்லை என்றால், இந்த இணையபக்கத்தில் இருந்து log out செய்து, பிரௌசரை மூடி, மீண்டும் login செய்யுங்கள்.
பிரச்சினை தொடர்ந்தால், எங்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
மின்னஞ்சல்: info@InnerEngineering.com அலைபேசி: (844) 474-2436.
நிச்சயமாக முடியும். அமர்வு வீடியோக்கள் அனைத்தையும் முழுத்திரையில் காண்பது சாத்தியம்தான். வீடியோவை பார்க்கத் துவங்கும்போது கண்ட்ரோல் பாரில் (control bar) முழுத்திரை (full screen)ஐ தேர்வு செய்யுங்கள்
வீடியோவைப் பார்ப்பதற்கு, குறைந்தபட்சம் 350 kbps வேகமுள்ள இன்டர்நெட் வசதி தேவைப்படும். நீங்கள் பிராட்பேண்ட் இணைப்பு (DSL, கேபிள், அல்லது சாட்டிலைட்) பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் இன்டர்நெட் வேகத்தை bandwidthplace.com – இணையதளத்தில் பரிசோதிக்க முடியும். நீங்கள் வைத்திருக்கும் இன்டர்நெட் வசதி குறித்து உங்களுக்கு சந்தேகம் இருப்பின், உங்களுக்கு இன்டர்நெட் வசதி வழங்கும் அன்பரை தொடர்பு கொள்ளவும்.
பெரும்பாலான Windows கணிணிகளில், டெஸ்க்டாப்-ல் எங்கு ரைட்-கிளிக் செய்தாலும் வரும் மெனுவில், Properties-ஐ தேர்வு செய்து, அதில் “Screen Saver” - tab ஐ தேர்வு செய்யவும். அதில் ஸ்க்ரீன் சேவர் செயல்படாமல் இருக்கவோ அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு செயல்படும் விதமாகவோ அதை மாற்றியமைக்கலாம்.
இதுவே Mac கணிணியாக இருப்பின், அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு இது பொருந்தும். கணிணியில் Apple ஐகானுக்குச் சென்று, “System Preferences”-ஐ தேர்வு செய்யவும். அதில் “Hardware”-ன் கீழே, “Energy Saver”-ஐ கிளிக் செய்து, அதில் "computer and display"ல் "sleep"ற்கான அமைப்பை 1.5 மணியாகவோ அல்லது எப்போதும் வேண்டாம் என்றோ அமைத்துவிடுங்கள்.

ஈஷா யோகா இல்லாத ஒரு வாழ்வை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது.

சத்குருவின் "ஈஷா யோகா" என் வாழ்வில் மிக ஆழமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் அனுபவங்களையும், ஆனந்தத்தையும், பாடங்களையுன் எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி.

வெவ்வேறு பதிவுமுறைகளில் படமெடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்றிணைக்கும் தொழில்நுட்ப ரீதியாக மிக சிக்கலான வேலை, கதைக்குள் கதை என பல நிலைகளில் விரியும் பிரம்மாண்டமான கதை, 1200 கோடி பொருட்செலவில் உருவான படம். இப்படிப்பட்ட படத்தைத் தொகுப்பது மிக வேலைப்பழுவான மன அழுத்தம் தரும் வேலை. இதற்கு நடுவில் நான் இத்தனை அமைதியாக எப்படித்தான் வேலை செய்கிறேனோ என்று என் படக்குழுவினர் அதிசயப்பட்டார்கள். ஈஷா பயிற்சிகளை நான் செய்து கொண்டிருக்காவிட்டால் இப்படத்தை என்னால் தொகுத்திருக்க முடியாது.

மன அழுத்தம் ஒரு பாதிப்பாக இல்லாமல் அன்றாட வாழ்வை நிதானமாக, தெளிவாக அணுகும் திறனை சத்குரு வழங்கும் கண்ணோட்டமும் பயிற்சிகளும் வழங்குகிறது. என் வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் அமைதியாக, நிதானமாக அதை எதிர்கொள்ளும் என் பக்குவம் பன்மடங்காக உயர்ந்துள்ளது.

சத்குரு வழங்கும் சக்திவாய்ந்த ஈஷா யோகா வகுப்பு என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது. இந்த வகுப்பு எனக்கு முடிவற்றதொரு பயணத்தை நோக்கிய மாபெரும் படியாக அமைந்தது.

நான் எதைத் தொலைத்தேனோ அதை மீண்டும் பெற்றுவிட்டேன். இப்போது அனைத்தும் புரிகிறது. எத்தனை வெற்றிகள், விருதுகள், பணம், உறவுகள் கிடைத்தாலும் அவை எதுவும் கொடுக்க முடியாத மிக ஆழமான அனுபவத்தை இது எனக்குக் கொடுத்திருக்கிறது. இவ்வுலகில் சத்குரு வாழும் அதே நேரத்தில் நானும் வாழ்வது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

நீங்கள் மட்டும் தயாராக இருந்தால், அனைத்திற்கும் உயரிய இந்த பிரபஞ்ச புத்திசாலித்தனத்தைப் பிரதிபலிக்கும் உங்கள் உள்-புத்திசாலித்தனத்தை தட்டி எழுப்பும் ஒரு கருவியாக இந்த ஈஷா யோகா செயல்படும்.

தெரியவேண்டிய அனைத்துமே உங்களுக்குள்தான் இருக்கிறது என்பதை இவ்வகுப்பு அழுந்தச் சொல்கிறது. என்னுடைய 25 கால தொழில் வாழ்க்கையில் இத்தனை அழகானதொரு வகுப்பில் நான் பங்கேற்றதில்லை. இவ்வகுப்பு தனிமனித வளர்ச்சி, தலைமை பொறுப்புணர்வு மேம்பாடு ஆகியவற்றை இன்னும் ஆழமாக உணர வழிசெய்கிறது.

இன்றைய உலகில் அமைதியை நிலைநாட்டும் மனிதரா சத்குரு? ஆம், ஆனால் அது மேலோட்டமான ஒரு வாக்கியம் மட்டும்தான். உண்மையில், வாக்கியங்கள் தாண்டி, அன்பு தாண்டி, வார்த்தைகள் தாண்டி, ஏன் ஏக்கத்தையும் தாண்டி, காலத்திற்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றிற்கான நுழைவாயிலாய் சத்குரு இருக்கிறார்.