Wisdom
FILTERS:
SORT BY:
மகிழ்ச்சியாக இருக்கும்போது யாருடனும் நீங்கள் மோதலில் இல்லை, மிகவும் அற்புதமான விஷயங்களை செய்கிறீர்கள்.
அன்பு என்பது உங்களுக்கு புத்தியை கொடுக்காது, சரியான நோக்கத்தை உங்களுக்கு தந்திடும், அவ்வளவுதான்.
திறமையும், ஒருமுகமான கவனமும் கொண்ட, ஊக்கம் மிக்க இளைஞர்களை உருவாக்குவதன் மூலம், இதுவரை உலகம் பார்த்திருக்காத மாபெரும் அதிசயமாக பாரதம் மாறிடும்.
சுவாசமும், இதயத் துடிப்பும் உடலுக்கு இன்றியமையாதது. தியானத் தன்மையில் இருப்பது மனித உயிருக்கு இன்றியமையாதது.
யோகா என்றால் சங்கமம். யோகா என்றால் ஆற்றலின் உச்சம் என்றும் அர்த்தம். அனைத்துடனும் ஒன்றி இருக்கும்போது, அதில் மகத்தான ஆற்றல் உள்ளது.
கர்மா என்பது நல்லது-கெட்டது பற்றியதே அல்ல, காரணம்-விளைவு பற்றியதே.
இன்று முதல், எந்த ஒன்றிலும் ஆர்வம் இல்லாமல் இழுத்தடிக்க வேண்டாம் - நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், என்ன நிகழ்ந்து கொண்டிருந்தாலும் - வாழ்க்கையை ஒரு ஆட்டத்தை போல ஈடுபட்டு வாழுங்கள்.
பொங்கல் பண்டிகை - நம் வாழ்க்கையை வளமாக்கும் மண், விலங்குகள், மக்கள், காற்று, நீர் என அனைத்தையும் கொண்டாடும் ஒரு விழா - கொண்டாடி மகிழ்வோம்!
கடந்து போன வருடத்தின் பாரங்களை உதிர்த்துவிட்டு புதியதாக, உயிரோட்டத்துடன் வெளிவரும் நேரம் இது.
வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு அதிக வலிமையுடன் நீங்கள் வெளிவர முடியும், அல்லது அதனால் உடைந்து போய்விட முடியும் - இந்த ஒரு சாய்ஸ் உங்களிடம் இருக்கிறது.