அவர் ஒரு மனிதனா
அவர் ஒரு தெய்வமா
அல்லது அரக்கர் அவதாரமா
இவற்றில் எதுவாகவும் இல்லை அவர்
ஆனால் தேவைக்கேற்ப இவற்றில்
எதுவாகவும் அனைத்துமாகவும்
மாறத் தயாராக உள்ளவர்.
நீங்கள் எதிர்கொள்வது
ஒரு வெற்றிடத்தை...
புரிந்துகொள்ளவோ
பேரம் பேசவோ முயலாதீர்கள்,
கரைந்து போவதே ஒரே வழி!