மனக்கசப்பு எனும் அமிலத்தில் ஊறிக்கொண்டு
இருப்பது யார்? இறந்தகால நினைவுகள் புளித்துப்
போவதுதான் இந்த மனக்கசப்பு. ஆனால், அந்த அமிலம்
உங்களை அரிக்கும்போது, நீங்களே அதுவாக மாறிவிடுகிறீர்கள்.
முடிந்துபோன, ஒருபோதும் இனி திரும்ப வராத
விஷயங்களை நினைத்து இவ்வளவு கசப்பு.
இனி பிறக்கக் காத்திருக்கும் சாத்தியங்களின்
கருவறையைப் புறக்கணித்துவிட்டு,
கல்லறைகளில் அல்லவா முதலீடு செய்கிறீர்கள்!
சுட்டரிக்கும் இந்த அமிலத்தில், பிறந்தவற்றையும்,
இனி பிறக்கக் காத்திருப்பவற்றையும் விட
இறந்துபோனவற்றுக்கே அதிக கவனம் கிடைக்கிறது.
புளித்துப்போன இந்த இறந்தகாலம்,
உங்களுக்கும் மற்றவர்களுக்கும்
விஷத்தை உருவாக்கக்கூடும்.
முடிந்துபோன, ஒருபோதும் இனி திரும்ப வராத
விஷயங்களுக்குத்தான் எத்தனை ஆற்றல்...