மே 2026
மே 2026
பிற மொழிகளில் வாசிக்க: English | Hindi
மோட்சம்
அடிமூலத்தின் நிச்சலனமே
மேற்பரப்பில்
ஆரவாரம் பொங்க இடமளிக்கிறது.
அது பேரண்டம் ஆகட்டும்,
பெருங்கடல் ஆகட்டும்,
புலப்படாத அணுவாகட்டும்,
ஒரு தனி உயிராகட்டும்.

ஆனந்தத்தின், அன்பின், பரவசத்தின்
பெருக்கெடுப்பு சாத்தியமாவது,
அடிமூலத்தின்
அசைவின்மையால்தான்.

ஒரே சமயத்தில்
இரண்டையும் ருசிப்பதே
உன் முக்திக்கு துரிதமான வழி.
Share This