என் சுவாசம்
அவள் சஞ்சலமான காதலி.
வருகிறாள், போகிறாள் —
என்னுடன் நிலைப்பதாய்
ஒருபோதும் உறுதி கூறாமல்.
என்னை பரிகாசம் செய்யும்படி
வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருக்கிறாள்.
எனது யோகசக்தி அனைத்தையும் திரட்டி
என் அரவணைப்பில் அவளை பிடித்துவைக்கலாம்
ஒரு நிமிடத்திற்கு, அதிகபட்சம் நான்கு, அவ்வளவுதான்!
தன்னை என்னுடன் பிணைத்துக்கொள்ளும்
அர்ப்பணிப்பான மங்கையல்ல அவள்
அது தாழ்ந்தது ஆகட்டும்,
வாசம் மிகுந்தது ஆகட்டும்
அனைத்து உயிர்களுடனும் கலப்பவள்.
எனது உள்ளொளி தெளிவுபடுத்தியது —
என்னுடையவளாக அவள்
ஒருபோதும் ஆகமாட்டாள்,
இருப்பினும் அவளே என் உயிர் மூச்சு!
என்னை சீண்டிப் பார்த்து பரிகாசம் செய்கிறாள்.
இனி நான் செய்யக்கூடியது இவ்வளவுதான் —
வாழ்க்கை, மரணம் இரண்டுக்கும் இடையில்
குதித்து விளையாடும் இவளின்
குதூகல ஆட்டத்தை
வெறுமனே உட்கார்ந்து கவனிக்க வேண்டும்,
அவ்வளவுதான்!