மிருதுவான ஆர்க்கிட்கள்
மணமுள்ள மல்லிகை
நுண்ணிதின் வண்ணமய சாயங்கள்
மாதுளையின் துல்லியமும்
நெல்லியின் புளிப்பும்
மாம்பழத்தின் மதுரமும்
தேங்காயின் அதிசயமும்
பழுப்போ கருப்போ ஆன
மண்ணின் வெளிப்பாடே
மகத்துவமான வாழ்வுக் கூட்டில்
மண்ணின் மாயமன்றோ
நீங்களும் நானும்