ஏற்கனவே பதிவு செய்துவிட்டீர்களா?

உங்கள் உடல், மனம், உணர்வுகள், சக்திநிலை ஆகியவற்றை உங்கள் கையில் எடுத்து ஆனந்தமான, நிறைவான வாழ்வை வாழ்ந்திடத் தேவையான கருவிகளை வழங்கும் ஓர் ஆன்லைன் நிகழ்ச்சி.

ஈஷா யோகா இப்போது ஒரு புதிய வடிவில்! 

புதிதாக என்ன உள்ளது?

  • புதிய வகுப்புகள் 

  • நிகழ்ச்சி முழுவதும் பங்கேற்பாளர்கள் சிறப்பாக ஈடுபடும்விதமாக, கலந்துரையாடல்கள், வீடியோக்கள் என   பல்வேறு அம்சங்களுடன் இந்நிகழ்ச்சி மெருகேற்றப்பட்டுள்ளது.

  • இதில் வழங்கப்படும் கருவிகளை நமது தினசரி வாழ்வில், சிறப்பாகப் பயன்படுத்த உதவும் விதமாக அறிவிப்புகள் மற்றும் நினைவூட்டல்களுடன் (notifications and reminders) மொபைல்-கு  ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்நிகழ்ச்சி, சக்திவாய்ந்த 21 நிமிட ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கான தீட்சை உட்பட, ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சியின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்டதாக உள்ளது.

இதற்கு முன்பே நீங்கள் ஈஷா யோகா ஆன்லைனிற்குப் பதிவு செய்துவிட்டதால்:

  • புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு குறைந்த கட்டணத்தில் பதிவுசெய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கான குறைக்கப்பட்ட கட்டணத்தைப் பார்க்க, கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்களை வழங்கவும். 

  • நீங்கள் விட்ட இடத்திலிருந்து உங்கள் ஈஷா யோகா பயணத்தைத் தடையின்றி தொடரமுடியும். உதாரணமாக, முந்தைய நிகழ்ச்சியில்  வகுப்பு 2ஐ முடித்திருந்தால், புதிய நிகழ்ச்சியில் படி #3லிருந்து தொடங்கமுடியும். 

நீங்கள் ஏற்கனவே ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை பெற்றிருந்தால், குறைந்த கட்டணத்தில் நிகழ்ச்சிக்கு மீண்டும் பதிவுசெய்வதற்கான வாய்ப்பும்  உள்ளது.

நிகழ்ச்சி உள்ளடக்கம்

மொத்தம் 25 மணிநேரம்
அல்லது
அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நிகழும்.

முதல் 6 படிகளை நீங்கள் விரும்பிய நேரத்தில் கற்றுக்கொள்ள முடியும்.

1வது படி

சுதந்தரத்தின் நுழைவாசல்

"வெற்றியை ருசிக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் சூழ்நிலையை கட்டமைக்கும் முன்பாக, முதலில் உங்களுக்குள் உங்களை கட்டமைத்துக் கொள்வது அவசியம்" – சத்குரு

2வது படி

எங்கே இருக்கிறது எல்லை?

"நீங்கள் உண்மையிலேயே ஆனந்தமாக இருந்தால், உங்கள் உணர்ச்சி எல்லைக்குள் இருக்கும் அத்தனையையும், உங்களில் ஒரு பகுதியாக உணர்வீர்கள்." - சத்குரு

3வது படி

ஒரு புதிய பரிமாணம்!

"உள்முகமாகத் திரும்பும்போது, இதுவரை அறிந்திராத வாழ்க்கைப் பரிமாணங்களும் சாத்தியங்களும் திறக்கின்றன." - சத்குரு

4வது படி

எது சந்தோஷம்?

"வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் சந்தோஷத்தை தேடித்தானே செய்கிறீர்கள்!" - சத்குரு

5வது படி

வினையும் விடுதலையும்

"ஒரு குறிப்பிட்ட கணத்தில் நீங்கள் விரும்பிய எந்த விதத்திலும் இருப்பதற்கான திறனும், வாய்ப்பும் உங்களிடம் இருக்கிறது. சுதந்திரமும் இதுதான், சாபமும் இதுதான். பெரும்பாலான மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தையே துன்பமாக உணர்கிறார்கள்." - சத்குரு

6வது படி

உயிரெனும் பூ மலர...

"நமக்கு மற்ற உயிர்களைப் பற்றி ஏதாவது அன்பும் அக்கறையும் இருந்தால், முதலாவது பொறுப்பு என்னவென்றால், நம் உயிரை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்." - சத்குரு

7வது படி குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் ஆன்லைனில் Liveஆக வழங்கப்படும்

7வது படி

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா தீட்சை

ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை உலகெங்கும் லட்சக் கணக்கான மனிர்களுக்கு அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் என்பதே என் விருப்பம், அதுவே என் ஆசி! – சத்குரு

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா பற்றி சத்குரு

நிகழ்ச்சியைத்

தொடரவும்

Isha Logo
Loading...

Secure payment gateway is opening.
Do not refresh or press the back button.