நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்

நம் ஆறுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் இது குறித்து நாம் கண்மூடித்தனமாக இருக்க முடியாது. நம் காலகட்டத்தின் மிகக்கொடுமையான நெருக்கடியை சந்திக்கும் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஈஷா அறக்கட்டளை "நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்" என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை துவங்கி உள்ளது.
 

நம் ஆறுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் இது குறித்து நாம் கண்மூடித்தனமாக இருக்க முடியாது. நம் காலகட்டத்தின் மிகக்கொடுமையான நெருக்கடியை சந்திக்கும் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஈஷா அறக்கட்டளை "நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்" என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை துவங்கி உள்ளது. இந்த இயக்கம் 16 மாநிலங்கள் மற்றும் அதன் முக்கிய நகரங்களில் இருபதிற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாய், சுமார் 7000கி.மீ. தூரம் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இத்தூரம் முழுமையும் சத்குரு தானே வாகனம் ஓட்டி செல்வார். அவரோடு வழியில் பல தலைவர்களும் பிரபலங்களும் கலந்துகொள்வார்கள்.

வாருங்கள், நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்.

80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.

மேலும் தகவலுக்கு: RallyForRivers.org