கிராமியத் திருவிழா

20150823_SUN_0375-e-edited
20150823_SUN_0545-e-edited
20150823_SUN_0514-e-edited
20150823_SUN_0478-e-edited
20150823_SUN_0465-e-edited
20150823_SUN_0380-e-edited
20150823_SUN_0309-e-edited
20150823_SUN_0285-e-edited
20150823_SUN_0281-e-edited
20150823_SUN_0179-e-edited
20150823_SUN_0121-e-edited
20150823_SUN_0068-e-edited

 

ஈஷா கிராமோத்சவம்

ஈஷா கிராமோத்சவம்

ஈஷா கிராமோத்சவம்

ஈஷா கிராமோத்சவம்

வெற்றி பெறவேண்டும் எனும் வேட்கை, தேவைப்பட்டால் தோல்வியையும் தழுவுவது; வெற்றியை நேர்த்தியாய் கையாள்வது, தோல்வியையும் நேர்த்தியாய் கையாள்வது – இவை யாவும் விளையாட்டு ஒருவருக்குள் தோற்றுவிக்கும் விஷயங்கள்.
– சத்குரு

10 ஊர்களில், மண்டல அளவிலான போட்டிகள்!

ஆகஸ்ட் 21ம் தேதி

இறுதிச்சுற்றின் ஆரவாரத்திற்கு முன்னோடியாக நிகழவிருக்கும் மண்டல அளவிலான கொண்டாட்டத்தில் பங்கேற்க, உங்களை அன்போடு அழைக்கிறோம். விளையாட்டு, வேடிக்கை, பரபரப்பான போட்டிகள் என அன்றைய தினம், திருவண்ணாமலை, இராஜபாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, ஆலந்துறை (கோயம்புத்தூர்), விருத்தாச்சலம், திருப்பத்தூர் என மொத்தம் 10 இடங்களில் களைகட்ட உள்ளது.

மண்டல அளவிலான இந்தச் சுற்றில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 வாலிபால் அணிகளும், 8 த்ரோபால் அணிகளும் மோதவுள்ளன.

  • கிராமோத்சவக் கோப்பைக்காக போட்டியிடும் உங்கள் உள்ளூர் அணிகளுக்கு ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகமூட்டுங்கள்.
  • உறியடி, வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல், மூன்று-கால் ஓட்டம், என இன்னும் பற்பல கிராமிய விளையாட்டுக்களில் பங்கேற்று மகிழுங்கள்.
  • ருசியான கிராமியப் பதார்த்தங்களின் சுவையில் திளைத்திட உங்களுக்காகவே ‘கிராமிய உணவுத் திருவிழா’!
  • ஈஷா புத்துணர்வு கோப்பை, 2016 ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால்

ஆண் – பெண், வயதானவர் – வாலிபர், ஜாதி-மத-இன-பொருளாதார வித்தியாசங்கள் அத்தனையும் கடந்து, நம் கிராமமக்கள் ஈஷா கிராமோத்சவப் ‘போட்டிக் கோப்பையை’ வெல்லும் உத்வேகத்தில் ஒற்றுமையாய், ஒன்றுகூடி விளையாடுகிறார்கள். அக்கோப்பையையும் மீறி, அவர்கள் முழு ஈடுபாட்டுடன் ஒத்துழைத்து விளையாடுவதில் தென்படும் நயம், ஒரு குடும்பமாய் செயல்படுவதில் அவர்கள் உணரும் ஆனந்தம், நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

ஈஷா கிராமோத்சவம், ஈஷாவின் ‘கிராமப் புத்துணர்வு இயக்கத்தின்’ கீழ் ஏற்பாடு செய்யப்படுகிறது. கிராம மக்களின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பொருளாதார, சமுதாய மேம்பாட்டிற்காக ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கம் செயல்பட்டு வருகிறது. இன்றுவரை இத்திட்டத்தின் மூலம் 4,600 கிராமங்களும், 42,00,000 மக்களும் பயன்பெற்று இருக்கிறார்கள்.

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

உங்கள் அருகில் நிகழும் மண்டல அளவிலான கொண்டாட்டத்தில் பங்கேற்க மேலும் தகவல்கள் இங்கே

Isha Gramotsavam