சத்குருவின் பனிக்கால வாழ்த்துக்கள்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அமெரிக்காவின் பனி படர்ந்த ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ் மையத்திலிருந்து சத்குரு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். வெண்பனியில் உறைந்திருக்கும் இயற்கையுடன் எடுத்த புகைப்படங்களையும், அதைக் கண்டு எழுதிய “என் புன்னகை” எனும் கவிதையையும், பனிமூடிய கால்ஃப் மைதானத்திலும் குறி தப்பாமல் பந்தை குழிக்குள் ‘பட்’ செய்யும் குறும்படத்தையும் சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார்.

என் புன்னகை

குவியல்களாகப் பனி கொட்ட
நீரும் உறைந்து உயிர் நிச்சலனமானது.
சூடேற்றப்பட்ட அறையும் கம்பளியுமின்றி
உயிர் எப்படி நடக்கிறதென பார்க்க
நான் வெளியே நடந்துசெல்கிறேன்.
வெளிப்பாட்டில் சற்றே தயக்கம் தவிர
எல்லாம் நன்றாகவே இருந்தது.
உடலின் இருமுனைகளிலுமிருந்து
என்மீது குளிர்படர்ந்து உறைவதை
உணர்ந்தபோது, என் முகத்தில்
ஒரு புன்னகை படர்கிறது, குளிர்க்காலம்
உறையவைக்க முடியாத ஒன்று
என் புன்னகை என்பதால்.
என் சிதையில் தீமூட்டி அதை நீங்கள்
எரிக்க வேண்டியிருக்கும்.

அன்பும் அருளும்,

Sadhguru

பனிபடர்ந்த கால்ஃப் மைதானத்தில் சத்குரு மிக அழகாக பந்தை குழிக்குள் அடிக்கும் 11 விநாடி வீடியோ:
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert