சத்குரு:

தன் அகந்தையை அளவுக்கு அதிகமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் பிரம்மன். அதனால், ஒரு தலைக்கு 5 தலைகளாய் அவர் தலைகள் மாறியிருந்தன. இதைப் பார்த்து ஆத்திரமுற்றிருந்த சிவன், அவரது ஒரு தலையினை கொய்தார். பிரம்மனின் தலையை கொய்த தோஷத்தால், சிவன் கைகளில் பிரம்மனின் கபாலம் ஒட்டிக் கொண்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
கடைசி 40 நொடிகளில், குறிப்பிடும்படியான விழிப்புணர்வு நிலையில் இருந்துவிட்டால், அத்தனை கர்மங்களையும் ஒருசேர கழித்து, கரைந்துவிடலாம்.

அந்த கபாலத்திலேயே பிச்சையெடுத்து சுற்றித்திரிந்தார் சிவன். காசியிலுள்ள "கபால மோச்சன" எனும் இடத்திற்கு சிவன் வந்தபோது, அங்கிருந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு குளத்தில் அந்தக் கபாலத்தை கழுவி எறிந்தார். தனக்கு ஏற்பட்ட துன்பங்களையும், தன் கைகளில் சிக்கியிருந்த பிரம்மனின் கபாலத்தையும் மிகச் சுலபமாய் சிவன் அங்கு கழுவுவதைப் பார்த்த மக்கள், "நாங்கள் சேகரித்து வைத்துள்ள பாவங்களையும் கழுவுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்" என வேண்டினர்.

அதனால், அவ்விடத்தில் "பைரவி யாத்னா" என இன்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையை சிவன் உருவாக்கினார். விழிப்புணர்வில் வாழ்ந்தவர்களுக்கும், பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வாழ்பவர்களுக்கும், அவர்களது வாழ்வின் கடைசி 40 நொடிகள் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாய் இருக்கும். விபத்திலோ, வயோதிகத்தாலோ, கொலையினாலோ, தற்கொலையினாலோ ஒருவர் இறக்க நேரிடும்போது கடைசி 40 நொடிகள் மிக வேகமாய் கழியும். ஒருவர் தன் வாழ்நாள் முழுதும் விழிப்புணர்வில்லாமல் வாழ்ந்திருக்கலாம், பல ஜென்மங்கள் விழிப்புணர்வு தொடாத நிலையில் இருந்திருக்கலாம், அறியாமையில் விசும்பி இருக்கலாம். ஆனால், அந்த கடைசி 40 நொடிகளில், குறிப்பிடும்படியான விழிப்புணர்வு நிலையில் இருந்துவிட்டால், அத்தனை கர்மங்களையும் ஒருசேர கழித்து, கரைந்துவிடலாம். அதனால், இன்று காசியிலுள்ள மணிகர்ணிகா படித்துறைக்கு அருகே, காலபைரவர் முன்னிலையில் பைரவி யாத்னா நடைபெறுகிறது.

தமிழ் மொழி, மரணம் எய்தியவரை மிக அழகாக, "காலமாகிவிட்டார்" என்று சொல்கிறது. ஏனெனில், உயிர் என்று நீங்கள் சொல்லும் அம்சத்திற்கும், இறப்பிற்கும், காலத்திற்கும் தொடர்பு இருக்கிறது. உங்கள் வாழ்வின் அடிப்படையும், உங்கள் இறப்பின் அடிப்படையும் காலமே.

ஆசிரியர் குறிப்பு: நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

 

msr-banner-tamil