அன்னையர் தினம் என்பது நம்மைப் பெற்றெடுத்த தாயை மட்டும் நினைவுகூர்ந்து நன்றியுடன் இருப்பதல்ல, படைப்பின் ஒவ்வொரு அம்சத்திற்குமே நன்றி செலுத்துவதற்கான நேரம். ஏனெனில் ஆழமாகப் பார்த்தால், இந்தப் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளுமே நம் இருப்பிற்கான காரணியாக இருப்பதைப் பார்க்கமுடியும் என்பதை சத்குரு இங்கு நமக்கு விளக்குகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நீங்கள் தற்போது சுமக்கும் உடலில், உங்கள் தாயின் கருவறையிலிருந்து வந்தது எதுவுமே இல்லை என்றே சொல்லலாம் - அது பெரும்பாலும் மறைந்துவிட்டது. இன்று நீங்கள் சுமப்பது எத்தனை கிலோவானாலும் அத்தனையும் பூமித்தாயிடமிருந்து வந்தது. உங்களை கருவில் சுமந்து பெற்றெடுத்த தாயை நான் குறைத்து எடைபோட முயலவில்லை, ஆனால் ஆன்மீகத் தேடுதலில் இருப்பவர் எல்லாவற்றையும் சரியான கண்ணோட்டத்தில் காண்பது அதிமுக்கியம்.

நம்மைப் பெற்றெடுத்த தாய், பூமித்தாய், இவ்விருவர் மீதும் நமக்கு நன்றியுணர்வுண்டு, இருவரின் அருமையையும் நாம் பாராட்டுகிறோம். நாம் இங்கு இருப்பது இந்தத் தாய், அந்தத் தாய் இருவராலும்தான். இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு பங்களிக்கும் எல்லாவற்றையும் எல்லோரையும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பாராட்டவேண்டும்.

உங்கள் மனதிலோ உணர்விலோ விஷயங்களை நீங்கள் மிகைப்படுத்தினால், உங்களை தவறான திசை நோக்கி செலுத்தி அதிகமான நேரத்தையும் சக்தியையும் வீணாக்குவீர்கள். ஏனெனில் நீங்கள் யாரையாவது விரும்பினால் நீங்கள் அவர்களை மிகைப்படுத்தவே செய்வீர்கள். நீங்கள் யாரையாவது வெறுத்தாலும் மிகைப்படுத்துவீர்கள். உங்களுக்கு யாரையாவது பிடித்திருக்கிறது என்றாலும் மிகைப்படுத்துவீர்கள், பிடிக்காவிட்டாலும் மிகைப்படுத்துவீர்கள். மிகைப்படுத்துதல் என்றால், தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் உண்மையிலிருந்து தடம் பிறழ்கிறீர்கள். உண்மையிலிருந்து தடம் மாறினால் உங்களுக்கு எதிராக நீங்களே செயல்படுகிறீர்கள். தனக்கு எதிராக தானே செயல்படும் ஒருவருக்கு பகைவன் தேவையில்லை. இதைத்தான் சுய-உதவி என்பார்கள்! உங்கள் வாழ்க்கையின் அழகே, நீங்கள் முற்றிலும் தற்சார்பு உடையவராக இருக்கிறீர்கள் என்பதுதான்.

நம்மைப் பெற்றெடுத்த தாய், பூமித்தாய், இவ்விருவர் மீதும் நமக்கு நன்றியுணர்வுண்டு, இருவரின் அருமையையும் நாம் பாராட்டுகிறோம். நாம் இங்கு இருப்பது இந்தத் தாய், அந்தத் தாய் இருவராலும்தான். இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு பங்களிக்கும் எல்லாவற்றையும் எல்லோரையும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பாராட்டவேண்டும். நம் நல்வாழ்வுக்குத் தேவையான எல்லாவற்றையும் படைத்தவன் பார்த்துக்கொள்கிறான். ஒவ்வொரு கணமும், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இந்த பூமி பிளந்து போவதில்லை, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு மூச்சுக்கும், காற்று தன்னைத் தராமல் தப்பித்து விடுவதில்லை. இந்த கோடானுகோடி சக்திகள், தாயைப் போலவும் தந்தையைப் போலவும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உழைத்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றை நீங்கள் கேட்டு வாங்கவில்லை, அவற்றுக்கு நீங்கள் கட்டணம் செலுத்துவதுமில்லை. எல்லாம் வெறுமனே உங்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால், இயற்கையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இவற்றை உங்களுக்கு வழங்குவதற்காக, அந்த அனைவருக்கும் முழுமையான நன்றியுணர்வுடன் நீங்கள் தலைவணங்க வேண்டாமா? நீங்கள் கேட்காமலேயே இந்த சக்திகள் அனைத்தும் உங்களுடன் ஒத்துழைக்கின்றன. இந்த ஒத்துழைப்பின்றி உங்கள் வாழ்க்கையை நடத்தும் திறன் உங்களுக்கு கிடையாது.

நீங்கள் மிகவும் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால், நீங்கள் உயிர்வாழத் தேவையற்ற ஒரே ஒரு பொருள் கூட இந்த படைப்பில் இருக்கவில்லை என்புது புரியும்.

இதனை நீங்கள் பாராட்டவில்லை என்றால், உங்கள் விழிப்புணர்வை நீங்கள் முழுவதுமாக தொலைத்துவிட்டிருக்கிறீர்கள் என்றால், அதற்குக் காரணம், உங்கள் தலைக்குள் நிகழும் பலவித குப்பைகளில் அமிழ்ந்து போய்விட்டீர்கள் என்பதுதான். உங்கள் தலைக்குள் நடக்கும் ஏதோ ஒன்று ஏன் உங்களுக்கு மிக முக்கியமாகி விட்டது என்றால் அதன் காரணம் நீங்கள் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதுதான்.

நீங்கள் மிகவும் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால், நீங்கள் உயிர்வாழத் தேவையற்ற ஒரே ஒரு பொருள் கூட இந்த படைப்பில் இருக்கவில்லை என்புது புரியும். அதனால் நீங்கள் எல்லாவற்றையும் தாயாகப் பாருங்கள். இன்று மரமெனும் அன்னையின் தினம், நாளை மலையெனும் அன்னையின் தினம், அடுத்த நாள் உங்களை பெற்றெடுத்த அன்னையின் தினம். இப்படி இதற்கென நாட்கள் குறிக்கப்பட்டதற்கான காரணம், இது இல்லாவிட்டால் மனிதர்கள் தங்கள் தாயைப் பற்றி நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். கலாச்சாரங்கள் இப்படி ஆகிவிட்டன. ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வாக இருந்தால், "இந்த மரங்கள் எனக்கு ஆக்ஸிஜன் தருகின்றன, ஒவ்வொரு கணமும் நான் உயிர்வாழ உறுதுணையாய் இருக்கின்றன." என்று உங்களுக்கு நீங்கள் நினைவுபடுத்திக் கொள்வீர்கள். ஒவ்வொன்றையும் இப்படி அங்கீகரித்தால், செல்லும் இடமெல்லாம் நீங்கள் விழிப்புணர்வாக மாறுவீர்கள்.