சத்குரு:

நான் எந்த மதத்தின் புனித நூல்களையும் படிக்காதவன். மதம் உண்மையில் அன்பைத்தான் போதிக்கிறதா? படையெடுப்புகளும் மதத்தின் அடிப்படையில்தானே நடந்தன?

மதம் என்ற சொல்லுக்கு உள்நிலை நோக்கிய ஒரு படி என்று அர்த்தம். உள்நோக்கிப் போவதற்காகத்தான் மதங்களே தவிர போர் புரிவதற்காக அல்ல.

துரதிருஷ்டவசமாக 'மதம்' என்ற சொல்லே ஒரு குழுவைக் குறிக்கிற அடையாளம் என்று இப்போது புரிந்துகொள்ளப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒன்றாக இருக்கிற மனிதர்கள் மத அடையாளங்களின் பேரால் பிரிந்து போகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள்கூட மதத்தின் பேரால் பகைவர்களாகி விடுகிறார்கள். மதம் மனிதர்களைப் புனிதர்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு. ஆனால் மதவாதமோ, மனிதர்களை மனிதர்களாகக்கூட வாழ விடுவதில்லை. மிருகங்களாக மாற்றிவிடுகிறது.

போராடுவதற்கான சூழல் ஏற்பட்டால்கூட அதைக் கடந்து போகிற பக்குவத்தைத்தான் மதம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் மதம் என்பது வீதிகளிலேயோ வழிபடுகிற இடங்களிலேயோ நிகழ்த்துகிற விஷயமல்ல. உங்கள் உள்தன்மை சம்பந்தப்பட்டதுதான் மதம்.

நீங்கள் மதநூல்கள் எதையும் படிக்கத் தேவையில்லை. உங்கள் உள்தன்மை என்னவென்று பார்க்கத் தெரிந்து கொண்டால் அதுவே போதும்.

மதம் உள்தன்மையை மேம்படுத்துவதற்கு வந்த ஒரு கருவி. மதத்தின் தலைவர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள், மதத்தை பேதம் ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாக மாற்றிவிட்டார்கள். மனித சமுதாயத்தின் நன்மைக்கு எதிராக உங்கள் மதத்தில் ஏதாவது இருக்குமென்றால் அது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டதால்தான் இருக்கும். மதம் பற்றி தவறாகப் புரிந்து கொண்டதால்தான் போர்கள் நடந்திருக்கிறதே தவிர மதங்களால் போர்கள் நடக்கவில்லை.

ஏசுநாதர் கூட, "கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறது" என்றுதான் சொன்னார். ஆனால் அவருடைய பெயராலேயே இன்றைக்கு ஒரு பெரிய ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டுள்ளது. கடவுளின் ராஜ்ஜியத்தை பல்வேறு மதங்களும் வெளியே ஏற்படுத்த முயற்சி செய்ததால்தான் போர்கள் வந்தன.

மனிதனுடைய உள்தன்மைதான் உயிருக்கு மூலம். எது உயிருக்கு மூலமோ அதற்குத்தான் கடவுள் என்று பெயர் கொடுத்திருக்கிறோம். உள்தன்மையை உணர்த்துவதற்காக தரப்பட்ட கருவிதான் கடவுள் என்பது. ஆனால் அந்தக் கருவி இன்றைக்கு உலகத்தையே விழுங்குகிற பசியோடு இருக்கிறது.

நீங்கள் மதநூல்கள் எதையும் படிக்கத் தேவையில்லை. உங்கள் உள்தன்மை என்னவென்று பார்க்கத் தெரிந்து கொண்டால் அதுவே போதும்.

நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

சத்குருவின் கருத்தாழம்மிக்க பல புத்தகங்களை onlineஇல் டவுன்லோட் செய்யலாம்.