கேள்வி : தன் குழந்தை என்ன துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெற்றோர் எந்த அளவுக்கு முடிவெடுக்கலாம்?

சத்குரு:

குழந்தையுடன் நல்ல நட்புடன் பழகி வந்திருந்தால், குழந்தை தானாகவே உங்கள் வழிகாட்டுதலை விரும்பும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொதுவாக பெற்றோர் வாழ்ந்த காலம் வேறு. குழந்தைகள் வாழும் காலம் வேறு. சூழல்கள் மாறிவிட்டபோது, அது புரியாமல், குழந்தைகளுக்கு வழிகாட்ட முனைவது சமயத்தில் அர்த்தமற்றுப் போகலாம். அதேசமயம், பெற்றோரின் அனுபவங்களைப் பயன்படுத்தாமல், குழந்தைகள் தாமாக தவறானவற்றை முயன்று அனுபவங்கள் மூலம் கற்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இவை இரண்டுக்கும் இடையில் ஒரு பொதுவான சமநிலையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அது நம் குழந்தைக்கும் சம்மதமானதாக இருக்க வேண்டும்.

குழந்தையுடன் நல்ல நட்புடன் பழகி வந்திருந்தால், குழந்தை தானாகவே உங்கள் வழிகாட்டுதலை விரும்பும். குழந்தைகளிடம் அம்மாவாக, அப்பாவாக சில காலம் மட்டுமே நடந்துகொள்ள முடியும். அதற்குப்பிறகு அவர்களிடம் நண்பர்களாகப் பழக வேண்டும். விரும்பாத இடத்தில் அறிவுரைகள் சொன்னால், அவை வேலை செய்யாது.

நண்பர்களாக சேர்ந்து உட்கார்ந்து பார்த்தால், இருக்கும் வாய்ப்புகளில் எது சிறந்தது என்று அறிவுரைகள் சொல்லாமலேயே தேர்ந்தெடுக்க முடியும்.

சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.