நன்மை உருவம்

சத்குருவுடன் ஈஷாங்கா 7% தொடர்பு வைத்துள்ள ஈஷாங்காக்களின் இல்லங்களில் சக்திவாய்ந்த அதிர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக சத்குரு அவர்கள் “நன்மை உருவத்தை" உருவாக்கியுள்ளார்கள். சத்குருவிடமிருந்து இந்த "நன்மை உருவத்தை" பெறும் அளப்பரிய வாய்ப்பு இந்த தொடர்பின் மூலம் ஈஷாங்காக்களுக்கு கிடைக்கும். இவ்வருடம், "நன்மை உருவம்" வைபவம் ஜூலை 27, 2018 (குருபௌர்ணமி) அன்று நடைபெறவிருக்கிறது.

"உங்களை நீங்கள் ஒரு இயந்திரம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உங்களுக்கென்று ஒரு மூளையும், ஓர் உடலும் இருக்கின்றன - ஆனால் அந்த இயந்திரம் உராய்வுகளின்றி இயங்குவதற்குத் தேவையான எண்ணெய்யாக இருப்பது அருள்தான். அந்த எண்ணெய் இல்லாமல், மிக சிறந்த இயந்திரம் கூட சிறப்பாக செயலாற்ற முடியாது"

நன்மை உருவம் என்பது செம்பினால் ஆன, பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த உருவம். இது தியானலிங்கத்தின் சக்தி வளையத்திற்குள் வைக்கப்பட்டு, பல்வேறு செயல்பாட்டினால் சக்தியூட்டப்பட்டு, ஈஷாங்காவினருக்கு சத்குருவால் வழங்கப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் வீட்டின் சூழ்நிலையையே மாற்றிவிடுவது பலருக்கும் அனுபவ உண்மை. நன்மை உருவம் வழங்கும் நிகழ்வில், சத்குரு அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு அருளின் வாசல் திறந்திடும் வண்ணம் தீட்சை வழங்குவார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷாங்கா 7%

சத்குரு தனது கருணையினால், தனது அங்கமாக திகழ அனைவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளார், அதுவே ஈஷாங்கா 7%.

“நான்”,“எனது” என்பதிலிருந்து ஒரு 7 சதவிகிதத்தை நீங்கள் குறைத்தால் அந்த இடத்தை ஒரு உயர்ந்த சாத்தியத்தைக் கொண்டு நிரப்பலாம். "நான்" என்ற எல்லையை உடைத்தால், பிறவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களை விட மிகப் பிரம்மாண்டமான ஒரு சக்தியை உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ள உருவாக்கப்பட்ட கருவி ஈஷாங்கா.”

ஈஷாங்கா குறித்து சத்குரு இன்னொரு விதமாக விளக்கும் பொழுது - ஈஷா என்கிற உருவமற்ற தெய்வீகத் தன்மை தானாக எந்த செயலும் செய்ய இயலாது. அந்தத் தன்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்க, அதற்கு அங்கங்கள் தேவை. அந்த தெய்வீகத் தன்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் புனித கரங்களாய் இருப்பவர்கள் ஈஷாங்கா.

புனிதமான குரு பௌர்ணமி தினத்தில் உங்கள் இல்லங்களையும், வாழ்வையும் தெய்வீக அருளில் நிரப்பிடுங்கள்.

தொடர்புக்கு:

94425 04655, 94878 95891, 7percent@ishafoundation.org

நீங்களும் 7% ஈஷாங்காவின் அங்கமாக கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்து அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

https://www.ishafoundation.org/General/ishanga-7.isa