கௌதம் கம்பீர்: தேசிய கீதத்திற்கு நிற்பது பற்றி எதனால் விவாதம் ஏற்பட்டது என்ற உண்மையறிய விரும்புகிறேன். தேசம் நமக்கு இவ்வளவு கொடுத்திருக்கிறது. அதனால் 52 விநாடிகள் நிற்பது பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது என்பதே என் தனிப்பட்ட நம்பிக்கை. சினிமா அரங்கில் ஒலிக்கப்பட்டாலும், பள்ளிகளில் ஒலிக்கப்பட்டாலும், எங்கு ஒலிக்கப்பட்டாலும் சரி. இதில் உண்மையறிய விரும்புகிறேன்.

சத்குரு: நமஸ்காரம் கௌதம்! நம் தேசத்தில் இப்படியொரு கேள்வியை நாம் கேட்கும் அவலநிலை ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டமானது இல்லையா?

நாம் நமது தேசம் என்ற வலுவான உணர்வை ஏற்படுத்தவில்லை என்றால், நம்மால் செழிக்கமுடியாது, உலகின் நல்வாழ்வுக்கு நம்மால் பங்காற்ற முடியாது, நாம் எவ்விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கமுடியாது.

தேசம் என்பது கடவுள் கொடுத்த விஷயமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது நாம் அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கும் ஒரு கருத்து. தன் அரசியலமைப்பின் அடிப்படையில்தான் ஒரு தேசம் உருப்பெற்றுள்ளது, அதன் குறியீடுகள் தேசியக்கொடியாகவும் தேசியகீதமாகவும் இருக்கின்றன. அதனால் கேள்வி இதுதான், நாம் செயல்படவேண்டும் என்றால், ஒரு தேசமாக செழிக்கவேண்டும் என்றால், தேசப்பற்றும் பெருமையும் முக்கியமா?

நான் தேசியவாதம் பற்றி பேசவில்லை. நான் மனிதநேயத்தையே ஆதரிக்கிறேன், மனித இருப்பு பிரபஞ்சமயமாக இருக்கவேண்டும் என்பதையே விரும்புகிறேன். ஆனால் தற்போது நீங்கள் ஒருசேர அணுகக்கூடிய பெரும்பகுதியான ஜனத்தொகை என்றால், அது தேசம்தான். ஒரு தேசமாக இந்தியாவில் 130 கோடி மக்கள் இருக்கிறோம். இதுவே ஒரு உலகமாக இருக்கிறது. நாம் நமது தேசம் என்ற வலுவான உணர்வை ஏற்படுத்தவில்லை என்றால், நம்மால் செழிக்கமுடியாது, உலகின் நல்வாழ்வுக்கு நம்மால் பங்காற்ற முடியாது, நாம் எவ்விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கமுடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கால்களே இல்லாவிட்டாலும், தேசிய கீதத்திற்கும் தேசியக்கொடிக்கும் ஏதோவொரு விதத்தில் உங்கள் மரியாதையை வெளிப்படுத்தவேண்டும், ஏனெனில் இவை தேசத்தின் குறியீடுகள்.

தேசிய கீதம் இதன் ஒரு அம்சம். "நான் எழுந்து நிற்கவேண்டுமா வேண்டாமா?" உங்களுக்கு இரண்டு கால்கள் இல்லாவிட்டால் உங்களை மன்னித்துவிடுவோம். ஆனால் கால்களே இல்லாவிட்டாலும், தேசிய கீதத்திற்கும் தேசியக்கொடிக்கும் ஏதோவொரு விதத்தில் உங்கள் மரியாதையை வெளிப்படுத்தவேண்டும், ஏனெனில் இவை தேசத்தின் குறியீடுகள். இதன்மூலம்தான் ஒரு தேசம் ஒன்றாகிறது. உங்கள் தேசிய கீதத்தை உங்களால் பெருமையுடன் பாடமுடியவில்லை என்றால், தேசம் என்பது எப்படி இருக்கும்?

"நான் சினிமா அரங்கில் எதற்காக நிற்கவேண்டும்? நான் அங்கு பொழுதுபோக்கிற்காகத் தானே வந்திருக்கிறேன்!" என்று சொல்பவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கடைசியாக குடியரசு தின அணிவகுப்பில் நீங்கள் கலந்துகொண்டது எப்போது? கடைசியாக சுதந்திர தின கொடியேற்றத்தில் நீங்கள் கலந்துகொண்டது எப்போது? கடைசியாக எங்காவது தேசிய கீதத்தை நீங்கள் பாடியது எப்போது? பள்ளிப்பருவத்தில் கட்டாயமாக்கியதால் செய்திருப்பீர்கள். அப்போதிலிருந்தே தேசத்தால் பலன்பெறுகிறீர்கள், ஆனால் தேசத்திற்காக பங்காற்ற விரும்பாமல் தேசத்தை பாதுகாக்க விரும்பாமல் இருக்கிறீர்கள்.

இந்திய இராணுவத்திலும் மற்ற பாதுகாப்புப் படைகளிலும் கோடிக்கணக்கானவர்கள் நம் எல்லைகளில் நின்று தினமும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். தினமும் வீரர்கள் உயிர்பலியாவதை கேள்விப்படுகிறீர்கள். அவர்களிடம் சென்று இந்த தேசம் பற்றி நமக்கு அக்கறையில்லை என்போம், அவர்கள் வீட்டுக்குச்சென்று அவரவர் வாழ்க்கையை வாழட்டும். உங்களுக்கு தேசம் பற்றிய அக்கறையே இல்லையென்றால், எதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து அவர்கள் இந்த தேசத்தை பாதுகாக்கிறார்கள்?

நம் தேசத்திற்காக நாம் எழுந்து நிற்கவேண்டுமா? 100 சதவிகிதம் ஆம்! தேசிய கீதத்திற்காக நிற்பது தேசத்திற்காக நிற்பதன் அங்கமா? ஆம்! 52 நொடிகள். இதுபற்றி விவாதம் நடக்கிறதா?

இந்த தேசத்தின் ஒவ்வொரு இளைஞரும், ஒவ்வொரு பிரஜையும், தங்கள் மனதிலும் இதயத்திலும் வலுவான தேசப்பற்றை உருவாக்குவது மிகவும் முக்கியம். சுதந்திரத்திற்குப் பிறகு நாம் செய்யத்தவறிய ஒரு விஷயமிது. சுதந்திரம் கிடைத்த பிறகு உடனடியாக இதை நாம் செய்திருக்க வேண்டும், ஏனென்றால் தேசம் என்பது நம் மனங்களிலும் இதயங்களிலும் மட்டுமே இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, தேசம் பற்றிய உணர்வும் உற்சாகமும் வெள்ளமென ஓடியபோது இதை நாம் செய்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அதை நாம் திறம்பட செய்யத் தவறிவிட்டோம். பலர் தங்கள் மதத்துடனும், ஜாதியுடனும், இனத்துடனும், பாலினத்துடனும், பல்வேறு அமைப்புகளுடனும், எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் கரடுமுரடான தனித்துவத்துடன் தங்களை அடையாளப்படுத்திவிட்டார்கள்.

நம் தேசத்திற்காக நாம் எழுந்து நிற்கவேண்டுமா? 100 சதவிகிதம் ஆம்! தேசிய கீதத்திற்காக நிற்பது தேசத்திற்காக நிற்பதன் அங்கமா? ஆம்! 52 நொடிகள். இதுபற்றி விவாதம் நடக்கிறதா? அவர்களுடைய ஒரே பிரச்சனை கைநிறைய பாப்கார்ன், கோலா இருப்பதுதான் - அது சிந்திவிடும் என அஞ்சுகிறார்கள். அதனால்தான் நிற்க விரும்பாமல் இருக்கிறார்கள்.

இந்த விவாதம் இனி இருக்கக்கூடாது! இந்த தேசத்தில் போதிய ஊட்டச்சத்து கூட இல்லாமல் இருக்கும் 40 கோடி மக்கள்மீது நமக்கு அக்கறை இருக்கிறது என்றால், வலுவான தேசப்பற்று கொண்டு இந்த தேசமக்களை நாம் பிணைப்பது மிகவும் முக்கியமானது. அது இல்லாவிட்டால் தேசமே இருக்காது. ஏனென்றால் நாம் அனைவரும் ஏற்றுள்ள கூட்டு உடன்படிக்கைதான் தேசம் என்பது. நாம் இந்த தேசத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லும்போது, நாம் சில விஷயங்களை மதிப்போம், மரியாதை தருவோம், அவற்றுக்காக எழுந்துநிற்போம் என்று ஒப்புக்கொண்டுள்ளோம்.

 

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

YAT18_Newsletter-650x120