தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட 14ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 2013 ஜீன் 23ம் நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் உலக மதங்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் விதமாக “Universality of Religions” என்ற தலைப்பில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் முக்கிய பேச்சாளர்கள் கலந்துரையாடினர். திரு.யால்வங் ருக்பா ஜி (Drukpa Order, Ladakh), தில்லி கத்தோலிக்க திருச்சபையின் இயக்குநரும் பேச்சாளருமான பிரான்சிஸ் டாக்டர் டொமினிக் இம்மானுவேல், புது தில்லி, அகில இந்திய இமாம் மற்றும் மசூதிகள் அமைப்பின் தலைவர் இமாம் உமர் அஹ்மத் இலியாஸி அவர்கள், ஜைன மத முதாபிடிரி Jain Math Mudabidri ஸ்வஸ்தி ஸ்ரீ பட்டாரக்கா சாருகீர்த்தி பண்டித ஆச்சார்யவார்யா ஸ்வாமிஜி, பேரூர் ஆதீனம் இளையபட்டம் தவத்திரு மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர அடிகளார், கௌமாரமடம், இராமகிருஷ்ண மடத்தின் ஸ்வாமி முக்திதானந்தா, மைசூர் செரா லச்சி புத்திஸ்ட் மானஸ்ட்ரியின் கெஷே கவாங் ஜக்னி, பிலகுப்பே, சின்மயா மிசனின் ஸ்வாமி சிவயோகானந்தா, பிரம்ம குமாரிகள், சீக்கியம் மற்றும் இஸ்கானின் பிரதிநிதிகள்.