சத்குரு ஈஷா வித்யாவைப் பற்றிய தன் நோக்கத்தை ஈஷா வித்யாவின் வருடாந்திர செய்திப் பட்டியலில் விவரிக்கிறார்.

சத்குரு: நமது கிராமங்களின் வழியாக நான் பயணிக்கும் பொழுது இந்த சின்னக் குழந்தைகளைப் பார்க்கையில் 5-6 வயதுள்ள குழந்தைகளின் கண்களில் ஒரு ஒளி தெரியும். வயது ஆக ஆக ஒர் 14-15 வயது ஆனவுடன் அந்த ஒளி காணாமல் போய்விடும், அந்தக் கண்கள் உயிரில்லாமல் இருக்கும்.

கிராமத்து இளைஞர்களுக்கு தன் வாழ்வில் இனி செய்ய ஒன்றுமில்லை என்ற நிலைமை வரவே கூடாது.

தமிழ்நாட்டில் 9.7 கோடி மாணவர்கள் அரசு பள்ளியில் பயில்கிறார்கள். இவை எண்ணிக்கை மட்டும்தான், கல்வியின் தரம் அடிபட்டுப் போயிருக்கிறது.

20 சதவிகித பட்டதாரிகளோ அல்ல அதற்கும் குறைவாகவே உள்ளவர்களே வேலை செய்யும் தகுதியில் இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் தனது பெற்றோர்களின் கைத்தொழிலையோ அல்ல கல்வியிலோ அல்ல கணக்கிலோ – எதிலுமே தேர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள். ஈஷா கல்வியின் முனைப்பினால் இதை மாற்ற முற்பட்டுள்ளோம் – மாற்றி இருக்கிறோம். கல்வியின் தரத்தை உயர்த்த நமது ஆசிரியர்கள் மிகுந்த முயற்சிகளை எடுத்து வருகிறார்கள், அதே சமயம் கல்வி என்பது மகிழ்ச்சிகரமான, ஆனந்தமான ஒரு செயலாகவும் இருக்க செயல்பட்டு வருகிறார்கள்.

இருந்தாலும் – ஒரு கைப்பிடி அளவு சமூக கண்ணோட்டமுள்ள நிறுவனங்கள்தான் இதற்கு ஒத்துழைக்கின்றன. இது மாபெரும் கடலில் ஒரு துளி போலத்தான் இருக்கிறது. ஆகையால் நாம் இப்பொழுது அரசு பள்ளிகளை தத்து எடுத்துக் கொண்டு, அப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளையும், பயிற்சி முறைகளையும் எப்படி அதிகமாக்குவது என்று நம்மால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு அரசு பள்ளிக்கு 4 ஆசிரியர்கள் என்ற முறையில் அனுப்பி, அவர்கள் அந்தப் பள்ளிகளில் இருந்து கொண்டு பள்ளிகளின் தரத்தை மாற்றியமைக்க செயல் புரிவார்கள்

நாம் அரசு பள்ளியின் ஆசிரியர்களுக்கு நமது ஈஷா வித்யா பள்ளிகளை ஒரு பயிற்சி முகாம்களாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதை ஒரு முன்னோடியாக எடுத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உயர்ந்த பயனை தந்து கொண்டிருக்கிறது

வரும் ஆண்டுகளில் ஈஷா வித்யா பெருமளவில் இதில் ஈடுபடும். இருந்தாலும் ஒரே நிறுவனத்தால் எல்லாவற்றையும் எடுத்துச் செய்வது என்பது முடியாத ஒரு செயல். நம்மால் ஊக்கப்படுத்தவும், வழிகளை உண்டாக்கித் தர முடியும், ஆனால் நாமே முன்னின்று இந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்ட செயலை நடத்துவது என்பது முடியாத செயல். மனித இனத்தின் வாழ்க்கைத் தரத்தை எண்ணிக்கையில் அடக்குவது கடினம், ஆனால் அந்த சாத்தியக்கூற்றை நம்மால் முடிந்த அளவு குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்காக ஈஷா சம்பாதித்திருக்கும் நற்பெயரும், மதிப்பும், சக்தியையும் வைத்து அரசு, பெரும் நிறுவனங்கள் மற்றும் அகில உலக நிறுவனங்களின் கதவுகளைத் திறக்க முற்படவேண்டும்.

உங்களால் முடிந்த அளவிற்கு இந்த கிராமப்புற இந்தியாவை மாற்றியமைக்க உங்கள் இன்றியமையாத பங்கை அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.