சர்ச்சைக்கு நீதிமன்ற தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது

நீதிபதிகள் எஸ்.நாகமுத்து மற்றும் வி.பாரதிதாசன்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஆகஸ்ட் 10ம் தேதி ஈஷா யோக மையத்தில் மா மதி மற்றும் மா மாயுவை சந்தித்து விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதியின் அறிக்கையின் அடிப்படையில், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த பெஞ்ச் வழங்கிய H.C.P.No.1656 of 2016 தீர்ப்பில் கூறியுள்ளது: முதன்மை மாவட்ட நீதிபதி,"குற்றச்சாட்டில் உண்மையில்லை. சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தங்கள் சுயவிருப்பத்தால் அறக்கட்டளையில் தங்கியுள்ளனர் என்று தனது அறிக்கையில் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். "ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்கிய இந்த பெஞ்ச், தனது தீர்ப்பில், "செல்வி.கீதா காமராஜ் மற்றும் செல்வி.லதா காமராஜ் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ஈஷாவில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை எவ்விதத்திலும் சுட்டிக்காட்ட எவ்வித ஆதாரமும் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். எனவே முதல் பார்வையில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ஈஷா யோக மையத்தில் தங்கள் சுயவிருப்பத்துடன் தங்கி, தங்களுக்கு விருப்பமான சந்நியாசப் பாதையை பின்தொடர்கின்றனர் என்பதில் நாங்கள் திருப்தியடைகிறோம். எனவே மனுவில் கேட்கப்பட்டிருக்கும் நிவாரணம் வழங்கப்படமாட்டாது. முடிவில் இந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது," என்று உத்தரவிட்டிருந்தார்கள்.

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான பொய் பிரச்சாரத்தால் சமுதாயத்தையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் செயலில் சில கலவரக்காரர்கள் ஈடுபட்டிருந்த சமயத்தில், உண்மையைக் காத்து, பிரச்சனைக்கு தீர்வு வழங்கியதற்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஈஷா அறக்கட்டளை நன்றிகூற விரும்புகிறது.

மேலும் இதனை நாங்கள் தெளிவாக பதிவுசெய்ய விரும்புகிறோம்: சிறைப்பிடித்து, மூளைச்சலவை செய்து, தனிமனிதர்களை சந்நியாசம் அல்லது பிரம்மச்சரியத்திற்கு கட்டாயப்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யாகும்.

மனித நல்வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் தீர்வுகள் வழங்கும் ஒரே நோக்கத்துடன் ஈஷா அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் சுயவிருப்பத்தால் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர், எந்த வற்புறுத்தலினாலும் இல்லை. ஈஷா யோக மையத்தில் கிட்டத்தட்ட 1500 முழுநேரத் தன்னார்வத் தொண்டர்கள் வசிக்கிறார்கள் (இதில் கிட்டதட்ட 200 பிரம்மச்சாரிகளும் 640க்கும் மேற்பட்ட திருமணமானவர்களும் அடங்குவர்). இவர்கள் அனைவரும் தங்களது சுயவிருப்பத்தின் பேரிலேயே இங்கு வசிக்கின்றனர், அவர்கள் விரும்புகையில், எச்சமயத்தில் வேண்டுமென்றாலும் இவ்விடத்தை விட்டுச் செல்ல முடியும்.

அதேபோல, மா மதி (34) மற்றும் மா மாயு (31) விஷயத்தில், அவர்கள் தங்கள் சுயவிருப்பத்தினாலேயே இங்கு இருக்கிறார்கள். எந்த விதத்திலும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக அவர்கள் ஈஷாவில் சிறைவைக்கப்படவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக அவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், பிரம்மச்சரியத்தை தங்கள் ஆன்மீகப் பாதையாக அவர்களது முழு விருப்பத்துடன் சுயமாக தேர்வுசெய்தனர்.

பிரம்மச்சரியம் அல்லது துறவறத்தின் பாதை என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வருகிறது. புத்தம், கிருத்துவம், சமணம், என்று உலகெங்கிலுமுள்ள ஆன்மீகப் பாரம்பரியங்களில் இது வழக்கில் இருக்கிறது. ஈஷாவில் பிரம்மச்சரியம் மிகவும் புனிதமாக போற்றிப் பாதுகாக்கப்படுகிறது, எவருக்கும் சுலபத்தில் இது வழங்கப்படுவதில்லை. இதற்கு ஒருவர் விண்ணப்பிப்பதற்கு முன்னர், தனக்குள் பார்த்து, சுயமதிப்பீடு செய்து, இந்த பாதையில் இருக்க என்ன தேவைப்படுகிறது என்பதை அவர் புரிந்து, இது அவருக்குப் பொருத்தமானதா இல்லையா என்று பார்த்திட குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. அதோடு, பலர் விண்ணப்பித்தாலும், அவர்களின் உறுதி, நேர்மை மற்றும் ஆன்ம தாகத்தின் அடிப்படையில் வெகுசிலரே தேர்வு செய்யப்படுகின்றனர். ஈஷாவில் எந்தவொரு தனி மனிதர் மீதும் பிரம்மச்சரியத்தைத் திணிப்பது குறித்து யோசித்துக்கூட பார்க்கமுடியாது.

மேற்கூறிய இரண்டு பிரம்மச்சரிணிகளும் இந்த அடிப்படையில்லா அவதூறுகள் பற்றி தங்கள் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்கள்: